ஓ.பன்னீர்செல்வமும் மு.க.ஸ்டாலினும், ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டும் சிரித்து கொண்டும் இருந்தனர் என அன்று சொல்ல சசிகலாவின் நினைவுகள் டி.டி.வி.தினகருடன் மு.க. ஸ்டாலின் சந்தித்த போது நினைவுக்கு வந்து போகிறது. 

தமிழக சட்டப்பேரவை இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் இன்று தொடங்கிய போது டிடிவி.தினகரனும்- எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஃப்ளாஷ்பேக்... ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். சிறிது நாள்களுக்குப் பின், அவரைப் பதவியிலிருந்து இறக்கிவிட்டு, முதல்வராகப் பதவியேற்க சசிகலா முயன்றார். இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதியில் 'தர்மயுத்தம்' தொடங்கினார். இதனால், அ.தி.மு.க துண்டானது. 

ஓ.பன்னீர்செல்வத்தைப் பதவியிலிருந்து இறக்குவதற்குக் காரணமாக, சசிகலா சொன்ன விஷயம் ’’சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவரும், முதல்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்தனர்’’என சொன்னார். இந்த பேச்சு அப்போது சமூக வலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டது. அடுத்து டி.டி.வி.தினகரன், தி.மு.க எம்.எல்.ஏ-விடமிருந்து நொறுக்குத்தீனியை வாங்க மறுத்த சம்பவமும் நடைபெற்றது. 

டி.டி.வி.தினகரன் - மு.க.ஸ்டாலின் சந்திப்பு பழைய நியாபகங்களை கிளறிவிட்டுள்ளது.