இதேபோல் ஒரு அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு பைபிள் கொடுக்கப்பட்டது, அதையும் கண்டித்து நாங்கள் பதிலுக்கு தேவாரம் கொடுக்கிறோம் ஆனா போராட்டம் செய்தோம். இப்போது கட்டாய மதமாற்றம் நடப்பதாக புகார்கள் வருகிறது, இதையெல்லாம் தடுக்க நிச்சயம் மதமாற்றத் தடுப்புச் சட்டம் அவசியம். மதமாற்றம் என்பது ஒரு தனி மனிதரின் உரிமை, என்றாலும் எவரொருவரும் ஒருவரை கட்டாயப்படுத்தக்கூடாது.

தமிழகத்திற்கு கட்டாய மதமாற்ற தடுப்பு சட்டம் வேண்டும் என்றும் தன்னையே மதமாற்றம் செய்ய முயற்சிகள் நடந்தது ஆனால் அதிலிருந்து தான் தப்பித்து வந்ததாகவும் மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். கோவில் விவகாரங்களில் அறநிலையத்துறையின் தலையீடு அதிகமாகி விட்டது என்றும், மற்ற மதத்தினரை போல மடங்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் பாஜகவுக்கும் இந்து சமய அறநிலைத்துறைக்குமான மோதல் அதிகரித்துள்ளது. மத பூஜை புனஸ்காரங்களில் இந்து அறநிலைத்துறை தலையிடக்கூடாது என்றும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. மொத்தத்தில் அறநிலையத்துறை என்பது அவசியமற்றது என்றும் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கூறிவருகின்றன.

இந்து மதத்தை முடக்கும் நோக்கில் தான் அறநிலையத்துறை உருவாக்கப்பட்டுள்ளது என்றும், கோவில் சொத்துக்கள் அறநிலைத்துறையால் சூறையாடப்படுகிறது என்றும், பலவகைகளில் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் அறநிலையத் துறையை விமர்சித்து வருகின்றன. இது ஒருபுறமிருக்க தமிழகத்தில் திமுக ஆட்சியில் கட்டாய மதமாற்றம் அதிகரித்துவிட்டது என்றும், ஆனால் கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டம் அவசியம் என்றும் பாஜகவினர் சர்ச்சை கிளப்பி வருகின்றனர். சமீபத்தில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி தற்கொலை பின்னணியில் கட்டாய மதமாற்றம் இருக்கிறது என்றும், பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆனால் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு தமிழக அரசு ஆதரவாக செயல்படுகிறது என்றும் விமர்சித்து வருகிறது.

இந்நிலையில் மாணவி தற்கொலை விவகாரத்தில் ஆராய்ந்து அறிய பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா முன்னாள் எம்பி நடிகையுமான விஜயசாந்தி உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழுவை அமைத்து அனுப்பியுள்ளார். அந்த குழு உயிரிழந்த மாணவியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜயசாந்தி, மாணவி தங்கி பயின்று வந்த தூய இருதய பள்ளி நிர்வாகத்தால் கட்டாய மதமாற்றம் செய்ய மாணவி நிர்பந்திக்கப் பட்டுள்ளார், அதேபோல் மாணவி கொடுத்த வாக்குமூலத்தில் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதற்கான தகவல் இருக்கிறது என்றும் கூறியுள்ளார்மேலும் இது தொடர்பாக ஜே.பி நட்டாவுக்கு அறிக்கை வழக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மாணவி விவகாரத்தில் கட்டாய மதமாற்ற முயற்சி நடந்திருக்கிறது என பாஜகவும், இல்லவே இல்லையென அரசும் மருத்து வரும் நிலையில், இந்த விவகாரம் பேசு பொருளாக மாறியுள்ளது. 

இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிகர் பரமாச்சாரிய சுவாமிகள் இது தொடர்பாக பேட்டி கொடுத்துள்ளார். அதில், தமிழகத்திற்கு கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டம் அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியின் முழு விவரம் பின்வருமாறு:- மதுரை ஆதீனமாக பொறுப்பேற்றது முதல் மடத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன், மடம் மற்றும் கோவில் பூஜை புனஸ்காரம் உள்ளிட்டவைகளில் அறநிலையத்துறையின் தலையீடு அதிகமாக உள்ளது, இவையெல்லாம் களையப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, ஹிந்து கோயில்கள், மற்றும் மடங்களுக்கு மட்டும் அறநிலையத்துறையின் மூலம் கடிவாளம் போடப்படுகிறது.

ஆனால் பிற மதங்களுக்கு அப்படியான கட்டுப்பாடுகள் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்தது பிறகு அறநிலையத்துறையில் பூஜைகள் எல்லாம் சரியாக நடக்கிறது. அதே நேரத்தில் திமுகவை சேர்ந்தவர்களும் சாமி கும்பிடுவதை பார்க்க முடிகிறது. இப்போது இந்து என்று சொன்னாலே இந்துத்துவா என்று சொல்லிவிடுகிறார்கள், மடங்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும், போப் சொல்வதுதான் அமெரிக்காவில் வேதவாக்காக உள்ளது. ஆனால் நமது நாட்டில் அப்படி இல்லை, அரியலூர் மாவட்ட மாணவி விவகாரத்தை அறிந்து துடித்துப் போய் விட்டேன். இதேபோல்தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ பள்ளியில் பயின்ற மாணவி விபூதியிட்டுச் சென்றார் என்பதற்காக அப்பள்ளி ஆசிரியர் அந்த மாணவியை அடித்து விட்டார், அப்போது நேரடியாக அந்த பள்ளிக்கே சென்று போராட்டம் நடத்தினேன். பிறகு அவர்கள் மன்னிப்பு கேட்டார்கள். 

இதேபோல் ஒரு அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு பைபிள் கொடுக்கப்பட்டது, அதையும் கண்டித்து நாங்கள் பதிலுக்கு தேவாரம் கொடுக்கிறோம் ஆனா போராட்டம் செய்தோம். இப்போது கட்டாய மதமாற்றம் நடப்பதாக புகார்கள் வருகிறது, இதையெல்லாம் தடுக்க நிச்சயம் மதமாற்றத் தடுப்புச் சட்டம் அவசியம். மதமாற்றம் என்பது ஒரு தனி மனிதரின் உரிமை, என்றாலும் எவரொருவரும் ஒருவரை கட்டாயப்படுத்தக்கூடாது. கொள்கை பிடித்து மதம் மாறினால் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் காசு பணத்திற்காக, சலூகைக்காக மதம் மாறக் கூடாது. அது தடுக்கப்பட வேண்டும், பள்ளிக்கூடங்களில் மதமாற்றம் என்பது நடக்கிறது, என்னையே மதமாற்றம் செய்ய முயற்சித்தார்கள், பகவதி இலட்சுமணன் என்ற எனது பெயரையே மாற்ற முயற்சித்தார்கள், ஆனால் நான் அதிலிருந்து தப்பித்து வந்து விட்டேன். எல்லா மதத்தையும் ஒரே மாதிரி பாவிக்க வேண்டும், அரசு உடனே இதைத் தடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.