Asianet News TamilAsianet News Tamil

கேப்டன பாக்கவிட மாட்டேங்கிறாங்க.. விஜயகாந்த் போட்டோவை பார்த்து குலுங்கி குலுங்கி அழும் ராதாரவி.

இதில் என்ன வருத்தம் என்றால், இத்தனை வருடங்கள் பழகிய என் நண்பர் விஜயகாந்த் புகைப்படத்தை பார்த்து என்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான் வருத்தம். இந்த போட்டோவில் விஜயகாந்த்தை அடையாளமே கண்டுபிடிக்க முடியவில்லை, இந்த புகைப்படத்தை என் நண்பர் எனக்கு அனுப்பிவைத்து, இது யார் என்று அடையாளம் தெரிகிறதா என கேட்டார், 

They did not allow to me to meet captain .. Radharavi who was shaking and crying when he saw Vijaykanth's photo.
Author
Chennai, First Published Mar 11, 2022, 10:53 AM IST

சமீபத்தில் வெளியான நடிகர் விஜயகாந்தின் புகைப்படத்தை பார்த்து நடிகர் ராதாரவி கண்ணீர் விட்டு அழுதுள்ளார். பல ஆண்டுகளாக பழகிய நண்பனை  அடையாளம் காண முடியாத அளவிற்கு விஜயகாந்த் உருவம் மாறி விட்டதே என ராதாரவி வேதனை தெரிவித்துள்ளார். பல முறை முயற்சித்தும் விஜயகாந்தை சந்திக்க அவரது குடும்பத்தினர் அனுமதிக்க மறுக்கின்றனர் என அவர் கூறியுள்ளார். 

கருப்பு எம்ஜிஆர்:

புரட்சித்தலைவர் எம்.ஜி ஆருக்கு பிறகு சினிமாவைப் போலவே அரசியலிலும் உச்சம் தொட்ட நடிகர் ஒருவர் உண்டென்றால் அது  கருப்பு எம்ஜிஆர் விஜயகாந்த் என்றே சொல்லலாம். அனைவராலும் கேப்டன் என்று அன்பாக அழைக்கப்படும் அவர் தமிழக மக்கள் மத்தியில் சிங்காசனமிட்டு அமர்ந்துள்ளார் என்றே சொல்லலாம்.  உயரமாக, வெள்ளையாக இருப்பவர்கள் மட்டுமே கதாநாயகராக முடியுமென்ற பிம்பத்தை ரஜினிக்கு பிறகு தகர்த்தவர் நடிகர் விஜயகாந்த் ஆவார். படப்பிடிப்பு தளத்தில் லைட்மேன் முதல் டைரக்டர் வரை அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவை, விதவிதமான உணவை வழங்கி மகிழ்ந்தவர் விஜயகாந்த். வீடு முதல் படப்படிப்பு தளம் வரை உணவு விஷயத்தில் எல்லோரையும்  சரி சமமாக பாவிக்கவும் பண்பு எம்ஜிஆருக்கு அடுத்து விஜயகாந்தின் உயர்ந்த குணங்களில் ஒன்றாக இன்றளவும் பேசப்படுகிறது.

They did not allow to me to meet captain .. Radharavi who was shaking and crying when he saw Vijaykanth's photo.

மௌனமாகிப்போன விஜயகாந்த்: 

புரட்சிகரமான வசனங்கள், எதார்த்த நடிப்பின் மூலம் சாமானிய மக்களின் ஆகச்சிறந்த நம்பிக்கைக்குரிய நாயகனாக தனக்கென தனி இடத்தைத் உருவாக்கி வைத்துள்ளார் விஜயகாந்த். பின்னாளில் அரசியலில் நுழைந்து, தனிக்கட்சி ஆரம்பித்து எதிர்க்கட்சி வரை உயர்ந்தார். எப்போதும் தன்னை நாடி வரும் ஏழை எளியோர்க்கு இல்லை என்று சொல்லாத கருணை உள்ளம் படைத்தவர்தான் விஜயகாந்த் என்பது ஊரறிந்த உண்மை.

இதையும் படியுங்கள்: பாமக.. இதோடு நிறுத்திக்க .. என்ன? சூர்யாவை மிரட்டி பார்க்கிறீர்களா.?? பயங்கரமா எச்சரித்த கம்யூனிஸ்ட்.

தனது திரைப்படத்தால், கணீர் குரலில், கம்பீரமாய் பக்கம் பக்கமாய் வசனம் பேசிய விஜயகாந்த் ஒரு கட்டத்தில் பேச முடியாத நிலைக்கு ஆளாகி உள்ளார். அந்த அளவிற்கு அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. தனது பேச்சால் புரட்சிகர வசனங்களால் தொண்டர்களை, ரசிகர்களை கட்டிப் போட்ட விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக மௌனித்து இருக்கிறார். அவரை சந்திக்க முடியாமல், அவரின் பேச்சை கேட்க முடியாமல் அவரது தொண்டர்கள் வேதனையில் தவித்து வருகின்றனர்.

தொண்டர்கள் தவிப்பு: 

வெளிநாடுகளுக்குச் சென்று அடிக்கடி சிகிச்சை எடுத்துக் கொள்ளும் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து விடுவார் என்ற நம்பிக்கை அனைவர் மத்தியிலும் இருந்து வருகிறது, அவர் இதோ சரியாகி விடுவார், அதோ சரியாகி விடுவார் என அவரது குடும்பத்தினர் கூறிவந்தாலும் அது இன்றளவும் வார்த்தை அளவிலேயே இருந்து வருகிறது.  இதனால் அவரது தொண்டர்கள் பெரும் மன உளைச்சலில் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவரின் தோற்றம் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அதை பார்த்து பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் விஜயகாந்தின் புகைப்படத்தை பார்த்து விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் கண் கலங்கினார். விஜயகாந்தை சந்திக்க தொடர்ச்சியாக முயற்சி செய்தும் அவரது குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை என ஆதங்கம் தெரிவித்திருந்தார்.

தேம்பி அழுத ராதாரவி: 

இந்நிலையில் நடிகர் ராதாரவியும் இதே வருத்தத்தை வெளிபடுத்தியுள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் கொடுத்துள்ள பேட்டியில் விவரம் பின்வருமாறு:  ( விஜயகாந்தின் புகைப்படத்தை பார்த்து கண் கலங்கியபடியே அவர் பேசியதாவது) விஜயகாந்தின் புகைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன், நான் கடவுளை கும்பிடுபவன், பெரியார் வழியில் வந்த எம்.ஆர் ராதாவின் மகன் இப்படி நடந்து கொள்வதா என பலரும் என்னை விமர்சிப்பார்கள். ஆனால் எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு, மக்களுக்கு அன்னதானம் செய்தவர் விஜயகாந்த், தர்மம் செய்தவர் விஜயகாந்த்.  அவருக்கு இப்படி பட்ட நிலைமை வரக்கூடாது. அவரின் கண்ணுபட போகுதய்யா படம் பார்த்துக் கொண்டிருந்தேன் ஒரு கட்டத்திற்கு மேல் நான் அழ ஆரம்பித்து விட்டேன். பழைய நடிகர்களின் திரைப்படத்தை பார்க்கும் போதெல்லாம் நான் அழுவது வழக்கம், ஆனால் நடிகர் விஜயகாந்தின் புகைப்படத்தை பார்த்து அழுது கொண்டிருக்கிறேன். 

They did not allow to me to meet captain .. Radharavi who was shaking and crying when he saw Vijaykanth's photo.

பார்க்க விட மாட்டேங்குறாங்க: 

இதில் என்ன வருத்தம் என்றால், இத்தனை வருடங்கள் பழகிய என் நண்பர் விஜயகாந்த் புகைப்படத்தை பார்த்து என்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான் வருத்தம். இந்த போட்டோவில் விஜயகாந்த்தை அடையாளமே கண்டுபிடிக்க முடியவில்லை, இந்த புகைப்படத்தை என் நண்பர் எனக்கு அனுப்பிவைத்து, இது யார் என்று அடையாளம் தெரிகிறதா என கேட்டார், எனக்கு அடையாளம் கண்டு பிடிக்கவே முடியவில்லை, பிறகு நீண்ட நேரம் கழித்து அவர் விஜயகாந்த் எனக் கூறினார். அதைக் கேட்டு அப்படியே நான் ஆடிப்போய்விட்டேன், துயரம் தாங்க முடியாமல் அவரை சந்திக்க வேண்டும் என நான் தொடர்ந்து முயற்சித்தேன், சுதீஷ்க்கு போன் செய்தால் அவர் எடுப்பதே இல்லை. ஒரு வழியாக அவரது மகன் விஜய் பிரபாகரனுக்கு போன் செய்தேன் நல்ல மரியாதையாக பேசினார், நிச்சயமாக சந்திக்கலாம் அங்கிள் என கூறினார். ஆனால் அதற்கு முன்பாக அம்மாவிடம் ஒரு வார்த்தை கேட்டுக்கொள்கிறேன் என கூறியவர் அதன்பிறகு எனக்கு பதில் கூறவில்லை.

இதையும் படியுங்கள்: " மக்கள்தான் எஜமானர்கள் மறந்துடாதீங்க".. அரங்கத்தை அதிரவைத்த ஸ்டாலின்.. ஆடிப்போன அதிகாரிகள்.

முதலமைச்சர் எல்லாம் அவரைச் சந்தித்தார்கள், அதுபோல நானும் சந்திக்க வேண்டும் என்று  விரும்பினேன். ஆனால் என்னை அனுமதிக்க மறுக்கிறார்கள் நான் சந்திப்பதினால் என்ன ஆகிவிடப் போகிறது என்று எனக்கு தெரியவில்லை.  விஜயகாந்த் என்னுடைய உற்ற நண்பர், என் பாசத்திற்குரிய பழைய நண்பர், இந்த புகைப்படத்தை பார்த்ததிலிருந்து எனக்கு மனசு சரியில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios