ஒவ்வொரு நபரும் சீனாவில் 9 மணி நேரத்திற்கு மேலாக தூங்குகிறார்கள் எனவும், அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு நாளும் இரண்டரை மணி நேரம் தொலைக்காட்சி பார்க்கிறார்கள் எனவும், இந்தியாவில் மக்கள் தங்களை கவனித்துக் கொள்ள மட்டும் ஒன்றரை மணி நேரம் செலவிடுகிறார்கள் எனவும், பிரிட்டனில் உள்ளவர்களுக்கு நாளொன்றுக்கு ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக ஃப்ரீ டைம் கிடைக்கிறது எனவும், சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பரவி விரவிக் கிடக்கும் மனித சமுகம் பல்வேறு கலாச்சாரம், வாழ்க்கை முறைகளைக் கொண்டுள்ளது. அது நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுகிறது. உணவுமுறை, பணிச்சூழல், வாழ்க்கை முறை என முற்றிலும் மாறுபட்டு இருக்கின்றன. இந்நிலையில் சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு சர்வதேச அளவில் முக்கிய நாடுகளில் மக்கள் என்ன மாதிரியான வாழ்வியலை கடைபிடிக்கின்றனர். அவர்களது வேலை, தூக்கம், உணவு முறை, கிடைக்கும் கூடுதல் நேரம் போன்றவற்றை புள்ளி விவரங்களாக தொகுத்துள்ளனர். இதற்காக 15 முதல் 64 வயது வரையிலான பெண்கள் மற்றும் ஆண்களின் அன்றாட நடைமுறையை அந்த அமைப்பு பதிவு செய்துள்ளது.பொழுது போக்குக்கு நேரம் இல்லாத மக்கள் மகிழ்ச்சி அற்றவர்களாக இருக்கிறார்கள். மக்கள் வெளியே சாப்பிடுவது, உறங்குவதற்கு நேரம் எடுத்துக் கொள்வது, விளையாடச் செல்வது என தங்களுக்கு கிடைக்கும் ஃபிரி டைமில் இதையெல்லாம் அனுபவிக்கின்றனர். 

 

இன்னும் சிலர் விளையாடுவது அல்லது கணினியில் திரைப்படங்கள் பார்ப்பது, அசைன்மென்ட் செய்வது, போன்றவற்றிலும் ஈடுபடுகின்றனர். இந்த அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியா மற்றும் சீனாவுடன் ஒப்பிடும்போது பிரிட்டனில் உள்ள மக்கள் தொலைக்காட்சிக்காக செலவிடும் நேரம் இரண்டு மடங்கு அதிகம். அதாவது சீனாவில் இணையதள பயன்பாடு குறைவாக உள்ளது இதற்கு காரணம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதே போல் பிரிட்டனில் உள்ளவர்களுக்கும்  தினமும் 5 மணி நேரத்திற்கும் மேலாக  ஃப்ரீ டைம் கிடைக்கிறது. இது அமெரிக்காவில் ஐந்து மணி நேரத்திற்கு சற்று குறைவாகவே உள்ளது. அதே இந்தியர்களுக்கு  4.13 மணிநேரம்  ஃப்ரீ டைம் கிடைக்கிறது. இந்த ஃப்ரீ டைம் மனிதர்களுக்கு அவசியம் எனவும் இது வேலை செய்யும் திறனை மேம்படுத்துகிறது எனவும் பிரபல உளவியலாளர் ஹிமான் குல்கர்னி தெரிவிக்கிறார்.

இந்தியாவில் 20 சதவீதம் பெண்கள் வேலைக்கு செல்பவர்களாக உள்ளனர். இங்கிலாந்தில் இதன் எண்ணிக்கை 72 சதவீதமாக உள்ளது. சீனாவில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் வேலைக்கு செல்கின்றனர். 

அமெரிக்காவில் இதன் எண்ணிக்கை 50 சதவீதமாக உள்ளது. குறிப்பாக இந்திய பெண்கள் பெருமளவில் குடும்ப வேலைகளைச் (home Maker)செய்பவர்களாக உள்ளனர். இந்திய பெண்களுக்கு ஆண்களைவிட குறைவான தூக்கம்,  ஃப்ரீ டைம் கிடைக்கிறது. உலக அளவில் சீன மக்கள் அதிகம் தூங்குகிறார்கள். இதில் இரண்டாம் இடத்தில் இந்தியர்கள் உள்ளனர்.

இந்தியர்கள் சீனர்களைவிட 15 நிமிடங்கள் குறைவாக தூங்குகிறார்கள். இதற்கு அரிசி சாதம் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.  அரசி சாதம் சாப்பிடுபவர்கள் அதிகம் தூங்குவார்கள் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தியர்களும் சீனர்களும் சமையலுக்காகவே அதிக நேரம் செலவிடுகின்றனர்.  இந்தியாவிலும் சீனாவிலும் குடும்ப கலாச்சாரம் உள்ளதே இதற்கு காரணம் என்ன கூறப்படுகிறது. சீன மக்கள் இந்தியர்களை விட 45 நிமிடங்கள் அதிக வேலை செய்கிறார்கள்.

அதேநேரத்தில் இந்தியர்களை விட நான்கு மடங்கு அதிகம் சம்பாதிக்கின்றனர். ஆனால் பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் உள்ளவர்கள் இந்தியர்களை விட மிகக் குறைவாக வேலை செய்தாலும், 20 முதல் 25 மடங்கு அதிகம் சம்பாதிக்கிறார்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.