Asianet News TamilAsianet News Tamil

இந்த 11 மருத்துவ கல்லூரிகளுக்குதான் மத்திய அரசு நிதி கொடுத்தது.. இதற்கு முன்பு இல்லை.. மா.சு விளக்கம்.

போகி பண்டிகையின் போது பழைய பொருட்கள் எரிப்பது என்பது முன்னர் நடந்து வந்தது, தற்போது அவை குறைந்துள்ளது என கூறினார். இது மக்களின் கலாச்சாரம் என்பதால் அவற்றை மக்கள் மாற்றிக்கொள்ள தாமதமாகும் என தெரிவித்தார். 

These 11 medical colleges were funded by the central government fund .. not before .. ma.su Explain.
Author
Chennai, First Published Jan 13, 2022, 1:15 PM IST

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு மத்திய அரசு அனுமதித்துள்ள 50 மருத்துவ இடங்களில் அனுமதிக்கப்படும் மாணவர்கள் இந்த ஆண்டு புதிதாக தொடங்கப்பட்டுள்ள இராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்படுவார்கள் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிங்ஸ் இன்ஸ்டியூட் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் முன்கள பணியாளர்களுடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினார். அதனை தொடர்ந்து மருத்துவ பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கினார். பின்னர் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த 2 தனியார் பள்ளி மாணவிகள் தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மூல நிதி திரட்டி 7 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி பயில உதவியாக  அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் செல்போன் வழங்கினர். தொடர்ந்து கிங்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களின் போக்குவரத்துக்காக புதிய வாகனத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

These 11 medical colleges were funded by the central government fund .. not before .. ma.su Explain.

அதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கு சுற்றுச்சுவர் பணி நடைபெற்று வருகிறது. ஒன்றிய சுகாதார அமைச்சரிடம் மதுரையில் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும், கோவையில் எய்ம்ஸ் கல்லூரி அமைக்க வேண்டும். 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும், நீட் தேர்வில் தமிழகத்திற்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுவை ஒன்றிய சுகாதார அமைச்சரிடம் முதலமைச்சர் வலியுறுத்தி மனு அளித்துள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட்பயிற்சி நிறுத்தப்படாது என்று கூறிய அவர் நீட் தேர்வு தேர்விலிருந்து விலக்கு பெற தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் 61 இடங்களில், 24 மணி நேரமும் தடுப்பூசி என்பது தமிழகத்தில் மட்டும் தான் உள்ளது. பொங்கல் விடுமுறை காரணமாக தடுப்பூசி முகாம்கள் இந்த வாரம் நடத்தப்படாது என்று கூறிய அவர் தடுப்பூசி முகாம்கள் மூலம் இதுவரை 3கோடியே 32லட்சத்து 64 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பூஸ்டர் தடுப்பூசி இதுவரை 60 ஆயிரத்து 51 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும். 15 முதல் 18வயதுள்ள குழந்தகளுக்கு 75% சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி செலுத்ததி முடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

These 11 medical colleges were funded by the central government fund .. not before .. ma.su Explain.

போகி பண்டிகையின் போது பழைய பொருட்கள் எரிப்பது என்பது முன்னர் நடந்து வந்தது, தற்போது அவை குறைந்துள்ளது என கூறினார். இது மக்களின் கலாச்சாரம் என்பதால் அவற்றை மக்கள் மாற்றிக்கொள்ள தாமதமாகும் என தெரிவித்தார். தமிழகத்தில் நேற்று புதிதாக திறக்கப்பட்ட 11 கல்லூரிகள் மட்டுமே மத்திய - மாநில அரசுகள் நிதி பங்களிப்பில் கட்டப்பட்டவை. இதற்கு முன் தமிழகத்தில் செயல்பட்டு வரும் 26 மருத்துவ கல்லூரிகளும் மாநில அரசின் பங்களிப்பில் கட்டப்பட்டவை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios