கமலை கலாய்க்கும் தெர்மோகோல் புகழ்..!

அரசியல் களத்தில் நடிகர் கமல் ஒரு நகைச்சுவை நடிகராகிவிட்டார் என  தெர்மோகோல் புகழ் செல்லூர் ராஜு தெரிவித்து உள்ளார்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி,பொதுமக்கள், பல்வேறு கட்சிகள்,  திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் போராடி வருகின்றனர்.

ஆளும் கட்சியான அதிமுகவும் ஒரு நாள் உண்ணாவிரத  போராட்டத்தில்ந ஈடுபட்டனர்.

இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தெர்மாகோல்  புகழ் செல்லார்ந ராஜு, திமுக பற்றியும்,மக்கள் நீதி மய்யம் தலைவர்  கமல் பற்றியும் கருத்து தெரிவித்து உள்ளார்

திமுக பற்றி சொல்லும் போது, காவிரி விவகாரத்தில் திமுக காங்கிரஸ்  பொய்யாக நடிகின்றன என்றும்,சினிமாவில் உலக நாயகனாக நடித்த  நடிகர் கமல், அரசியல் களத்தில் நகைச்சுவை நடிகராகி விட்டார் என்று கூறுகிறார். இவர் தமிழக முதல்வராகி விடுவார் என கனவு காண்கிறார். ஆனால் அது பலிக்காது எனவும் தெரிவித்துள்ளார் தெர்மாகோல் புகழ் செல்லூர் ராஜு