சென்னையில் அடுத்தாண்டு பருவமழைக்குள் வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் பணி முடிக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் அடுத்தாண்டு பருவமழைக்குள் வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் பணி முடிக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்ததன் காரணமாக மாநிலம் முழுவதும் கனமழை பெய்தது. குறிப்பாக, சென்னை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறிவிட்டன. இதையடுத்து, ராட்சத மோட்டார்கள் மூலம் தேங்கியுள்ள தண்ணீரை வாரியிறைக்கும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் சென்னையின் பல பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இந்த நிலையில் சென்னையில் அடுத்தாண்டு பருவமழைக்குள் வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் பணி முடிக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை பெருநகர மாநகராட்சி 146 ஆவது வார்டு மதுரவாயல் ஆலப்பாக்கம் மகாத்மா காந்தி தெரு, ராஜீவ் காந்தி நகர், திருமுருகன் நகர் பகுதிகளில் ரூ.2 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், கடந்த பருவமழையின் போது சென்னையில் பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது, முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். பின்னர், ஓய்வுப்பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைத்து வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறியப்பட்டது.

இந்தாண்டு பருவமழையை எதிர்கொள்ள வடிகால் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து செய்து வருகிறது. தற்போது பணி தொடங்கப்பட்டு இருப்பதால் வடிகால் அமைக்கும் பணி முழுவதுமாக நிறைவடைய வாய்ப்பு இல்லை. சென்னையில் அடுத்தாண்டு பருவமழைக்குள் வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் பணி முடிக்கப்படும். மக்களை தேடி மருத்துவ திட்டம் மூலம் 72 லட்சத்து 82 ஆயிரத்து 689 பேருக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1 கோடியே 64 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளனர். வரும் 12 ஆம் தேதி நடைபெறும் தடுப்பூசி முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.