உதயநிதி நிகழ்ச்சியில் இருக்கை ஒதுக்கீட்டில் சர்ச்சை..! அதிருப்தி தெரிவித்த ஒலிம்பிக் சாம்பியன்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், ஹாக்கி உலகக் கோப்பையில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு மேடையில் இடம் அளிக்கப்படாததால் சர்ச்சை ஏற்பட்டது. அப்போது ஒலிம்பிக் சாம்பியன் பாஸ்கரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹாக்கி கோப்பை அறிமுக விழா
உலகக் கோப்பை ஹாக்கி போட்டி வருகிற ஜனவரி மாதம் 13ம் தேதி ஒடிஷாவில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து ஹாக்கி சாம்பியன் கோப்பையை அறிமுகம் செய்யும் விழா சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஒலிம்பிக் சாம்பியன் பாஸ்கரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இருக்கை ஒதுக்குவதில் சர்ச்சை
அப்போது, அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஹாக்கி வீரர்களுக்கு இடம் ஒதுக்காமல் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மேடை ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால் அதிருப்தி அடைந்த ஒலிம்பிக் சாம்பியன் பாஸ்கரன், அங்கிருந்த அதிகாரிகளிடம் வாக்குவாத்த்தில் ஈடுபட்டார். இது ஹாக்கி நிகழ்ச்சியா அல்லது விருது வழங்கும் விழாவா என கேள்வி எழுப்பினார்.இதனையடுத்து அங்கிருந்த அதிகாரிகள் பாஸ்கரனை சமாதானம் செய்ய முயன்றனர்.
இனி தவறு நடைபெறாது- உதயநிதி
இருந்து போதும் ஹாக்கி வீரர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியிடம் தனது அதிருப்தியை பாஸ்கரன் தெரிவித்தார். இதனையடுத்து விழா மேடையின் முதல் வரிசையில் ஹாக்கி வீரர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர்களிடையே விளையாட்டின் மீதான ஆர்வத்தையும், ஆர்வமுள்ளவர்களுக்கான வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டியது நம்முடைய பொறுப்பு என தெரிவித்தார். மேடையில் வீரர்களுக்கு இருக்கை ஒதுக்கப்படாதது தொடர்பாக பேசியவர், இனி இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காது என உறுதியளித்தார்.
இதையும் படியுங்கள்