இந்நிலையில் அப்பணிகளை முதலமைச்சர் இன்று நேரில் ஆய்வு செய்தார். கடந்த வருடம் நவம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை தீவிரம் காட்டியதை அடுத்து சென்னை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளித்த நிலையில், வருகின்ற பருவமழை காலங்களில் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் கடந்த ஆண்டு அதிக அளவில் நீர் தேங்கிய இடங்களை அடையாளம் கண்டு மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த வடகிழக்கு பருவ மழையின் போது கடுமையாக வெள்ள பாதிப்பிற்குள்ளான செனடாப் சாலை, சி.வி ராமன் சாலை, மேற்கு மாம்பலம் , ஆற்காடு சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். சென்னையில் இனி வெள்ள பாதிப்பு என்ற பேச்சுக்கே இடம் இருக்காது என முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே உறுதியளித்துள்ள நிலையில் அவர் இப்பணிகளை ஆய்வு செய்து துரிதப்படுத்தி வருகிறார். எப்போது மழை பெய்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிப்பதே சென்னையின் வாடிக்கையாக இருந்து வருகிறது. அதிலும் கடந்த முறை பெய்த கன மழையில் ஒட்டுமொத்த சென்னைக்கும் கடல் போல காட்சியளித்தது. குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகினர். பல வீடுகள் தண்ணீரில் மூழ்கியது.

அதிமுக -திமுக மாறி மாறி ஆட்சி செய்தாலும் சென்னையின் காட்சி மட்டும் மாறவில்லை என பலரும் புலம்பினர். கடந்த அதிமுக ஆட்சியின்போது ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டம் பல கோடி ரூபாய் மதிப்பில் சில இடங்களில் செய்யப்பட்டது, அந்த இடங்களில் எல்லாம் ஒரு சொட்டு தண்ணீர்கூட தேங்காது என அப்போதைய அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் கூறி வந்தனர். மாறாக கடந்தாண்டு மழையில் அப்பகுதியிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்ட, தி நகர், மாம்பலம், கோடம்பாக்கம் போன்ற பகுதிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடந்ததே வெள்ளப்பெருக்கு காரணம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழல் குறித்து விசாரிக்கப்படும் என்றும், இதற்கு காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.
இனி வரும் காலங்களில் சென்னையில் வெள்ளப்பெருக்கு இல்லாத நிலை உருவாக்கப்படும் என்றும் அவர் அப்போது உறுதியளித்தார். தற்போது சென்னை மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தப்பட்டு உள்ளாட்சி பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் அடிப்படை கட்டமைப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது. அதை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சி மண்டலம் 5க்குட்பட்ட நந்தனம், செனடாப் சாலை, மூப்பனார் பாலம் அருகே 870 மீட்டர் நீளத்தில் 2.6 கோடி செலவில் சீதம்மாள் காலனி சி.வி ராமன் சாலையில் 25.85 கோடி செலவிலும் மற்றும் மேற்கு மாம்பலம் ஆற்காடு சாலை பகுதிகளில் 9.5 கோடி செலவிலும் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 
இந்நிலையில் அப்பணிகளை முதலமைச்சர் இன்று நேரில் ஆய்வு செய்தார். கடந்த வருடம் நவம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை தீவிரம் காட்டியதை அடுத்து சென்னை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளித்த நிலையில், வருகின்ற பருவமழை காலங்களில் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் கடந்த ஆண்டு அதிக அளவில் நீர் தேங்கிய இடங்களை அடையாளம் கண்டு மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக முதற்கட்டமாக 310 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து சென்னை மாநகராட்சி உட்புறத்தில் அமைந்துள்ள 2078 கிலோ மீட்டர் தொலைவுக்கு மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், அந்தந்த மண்டல அலுவலர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல் கடந்த 17ஆம் தேதி ராயபுரம், திருவிக நகர், மயிலாப்பூர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் சிறப்பு பணிகளை முதலமைச்சர் ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வுப் பணியின் போது மாநகராட்சி ஆணையர் க கன்தீப் சிங் பேடி, சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை தா.வேலு ஆகியோர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
