பாஜகவில் பாரத மாதா என்று கூறுகின்றோம். அதிமுகவில் அம்மா என்று கூறுகின்றோம். அதிமுக மற்றும் பாஜக வில் பெண்களை மதிப்பதே கலாச்சாரமாக இருக்கின்றது.  

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாரதீய ஜனதா கட்சியின் ஆயிரம் தொகுதி வேட்பாளர் திருமதி குஷ்பூ அவர்கள் இன்று காலை சென்னை மாம்பலம் பிரதான சாலை, பார்த்தசாரதிபுரம், லாலா தோட்டம் , கோலமாமணி தெரு ஆகிய இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவந்தார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அங்கு கூட்டணி கட்சியினர் குஷ்பூ அவர்களுக்கு மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும், பட்டாசுகள் வெடித்தும் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் முதல் முறையாக தேர்தலில் நிற்பதால் என் கணவர் எனக்காக ஆதரவு கேட்டு பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் ஆ. ராசாவின் அவதூறு பேச்சு மிகவும் தவறானது என்றும், அதை தாங்கள் அனைவரும் கண்டிக்கின்றோம் என்று கூறினார். 

பெண்களை பற்றி பேசுவது என்பதே தவறான ஒன்று. ஆனால் திமுக விற்கு இது ஒன்றும் புதிது இல்லை என்றார். நாம் அதை அதிகம் பார்த்துவிட்டோம் பெண்களை பற்றி லியோனி, உதயநிதி மற்றும் நேரு முதலானோர் தவறாக பேசி இருந்தனர். இப்படி தொடர்ச்சியாக பேசுவது அவர்களுத்து கலாச்சாரம் ஆகிவிட்டது. 

ஆனால் பாஜகவில் பாரத மாதா என்று கூறுகின்றோம். அதிமுகவில் அம்மா என்று கூறுகின்றோம். அதிமுக மற்றும் பாஜக வில் பெண்களை மதிப்பதே கலாச்சாரமாக இருக்கின்றது. ஆனால் திமுகவினர் கலாச்சாரம் என்பது பெண்கள் மற்றும் தாயை பற்றி அவதூறாக பேசுவது மட்டுமே. இதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது என்று அவர் பேசினார்.