there is no subsidy in govt Jobs if the 3rd child get

2 குழந்தைகள் பெற்றவர்கள் 3-வது குழந்தை பெற்றால் அந்த குழந்தைக்கு அரசு வேலை, மானியம் கிடையாது என்று சட்டம் கொண்டு வரக் கோரி மக்களவையில் பா.ஜனதா எம்.பி. சார்பில் தனிநபர் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

தேசிய அளவிலான மக்கள் தொகை கொள்கையை கடுமையாக அமல்படுத்தக் கோரி இந்த மசோதாவை பா.ஜனதா கட்சியின் எம்.பி. ராகவ் லகன்பால் தனிநபர் மசோதாவாக தாக்கல் செய்துள்ளார்.

‘தேசிய மக்கள்தொகை கொள்கை-2018’ என்ற பெயரில் மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ‘தேசிய மக்கள்தொகை கொள்கை-2000’ மசோதாவில் திருத்தம் செய்து 2 குழந்தைகளுக்கு மேல் ஒருவர் பெறக்கூடாது என்ற விதிமுறை சேர்க்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் மக்கள் தொகையால் அடுத்த 50 ஆண்டுகளில் மிகப்பெரிய பேராபத்தை நாடு சந்திக்க வேண்டியது இருக்கும். ஆதலால், ‘மக்கள் தொகை கொள்கை 2000’ மாற்றம் செய்து, மக்கள் தொகை 2018 அமல்படுத்த வேண்டும். ஒரு குடும்பத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளக்கூடாது என்று சட்டத்திருத்தம் கொண்டு வர வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மசோதாவின்படி, ஒரு குடும்பத்தில் 2 குழந்தைகள் இருந்து 3-வதாக குழந்தை பெற்றால், அந்த குழந்தைக்கு அரசு வேலை, மானியங்கள் ஏதும் கிடையாது, தேர்தலிலும் போட்டியிட முடியாது. இதை அமல்படுத்த மக்கள் தொகை கட்டுப்பாடு அமைச்சகம் என்று தனியாக துறை உருவாக்கவும் அதில் கோரப்பட்டுள்ளது.

இதை சட்டமாகக் கொண்டு வர வேண்டும் எனக் கோரி பா.ஜனதா எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, ரவீந்திர குமார் ரே ஆகியோரும் ஆதரித்து பேசினர்.