எல்லோரும் நம்முடன் என்கிற இணைதயதள உறுப்பினர் சேர்க்கையை ஆரம்பித்து 17 லட்சம் உறுப்பினர்களை புதிதாக சேர்த்துள்ளதாக மார்தட்டி வருகிறது திமுக. ஆனால், அந்த உறுப்பினர் சேர்க்கை தவறானது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அதிமுக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த திமுக தலைவர், கருணாநிதி என பல போலியான பெயர்களில் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு இருந்தனர். 

ஆனால், திமுகவைப்போலவே ரஜினி ஆரம்பிக்கப்போகும் கட்சிக்கும் இணையதள வழியாக உறுப்பினர் சேர்க்கைக்கு ஆள் சேர்க்கும் படலமும் தொடங்கி இருக்கிறது. ஆனால், திமுகவை போல போலி உறுப்பினர்கள் இந்த இணையதளத்தில் இணைய முடியாது. தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள வாக்காளர் அட்டையில் உள்ள பெயரும், ரஜினி மக்கள் மன்றத்தின் பதிவு செய்தவர் பெயரும் ஒன்றாக இருந்தால் அவர்கள் தங்களின் உறுப்பினர் அட்டையை உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

இந்த இணையதளம் கடந்த மக்களவை தேர்தல் சமயத்தில் மட்டும் செயல்படாமல் இருந்தது. அதன் பின் இணையதளம், மொபைல் ஆப் ஆகியவை வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன. அதில் தற்போது புதிய உறுப்பினர்கள்  இணைந்து கொள்ளலாம் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூறியுள்ளனர்.