Asianet News TamilAsianet News Tamil

வி.பி.துரைசாமி எல்லாம் ஒரு ஆளா? அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. கே.பி.முனுசாமி சரவெடி..!

நேற்றுவரை ஒரு கட்சியில் இருந்தவர் (வி.பி.துரைசாமி), அதற்கு முன் இன்னொரு கட்சியில் இருந்தவர் ஏதோ ஒரு ஆதாயம் கிடைக்கும் என்பதற்காக பாஜகவுக்குச் சென்றுள்ளார். அவர் சொல்வதெல்லாம் கருத்தா? என  கே.பி.முனுசாமி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். 

There is no need to reply to vp duraisamy...kp munusamy
Author
Tamil Nadu, First Published Aug 13, 2020, 2:09 PM IST

நேற்றுவரை ஒரு கட்சியில் இருந்தவர் (வி.பி.துரைசாமி), அதற்கு முன் இன்னொரு கட்சியில் இருந்தவர் ஏதோ ஒரு ஆதாயம் கிடைக்கும் என்பதற்காக பாஜகவுக்குச் சென்றுள்ளார். அவர் சொல்வதெல்லாம் கருத்தா? என  கே.பி.முனுசாமி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், முனுசாமி மற்றும் மனோஜ் பாண்டியன், அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றனர். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.பி.முனுசாமி;- தேர்தல் பணியைப் பற்றி ஆலோசிக்க இன்றைய கூட்டம் கூட்டப்பட்டது. முதல்வர் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். அவருக்குத் துணையாக துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளார். அமைச்சர்கள் செயல்படுகின்றனர். 

There is no need to reply to vp duraisamy...kp munusamy

இன்று கொரோனா பேரிடர் சூழ்ந்த இக்கட்டான நிலையில் தமிழகம் முன் மாதிரி மாநிலமாகச் செயல்படுகிறது. முதல்வர் தலைமையில் இந்தியாவிற்கே முன் மாதிரியாக தொற்றுத் தடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. அது ஆட்சிப்பணி. கட்சிப் பணி குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம். முதல்வர் வேட்பாளர் யார் என நீங்கள் கேட்ட கேள்விக்கு உரிய காலத்தில் உரிய முடிவை உரிய முறையில் எடுப்போம். அதைக் கட்சி தலைமை நிர்வாகிகள் அறிவிப்பார்கள். 

There is no need to reply to vp duraisamy...kp munusamy

மேலும், பேசிய அவர் பாஜக தலைமையில்தான் கூட்டணி என்று அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் சொன்னாரா? தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா சொன்னாரா? நேற்றுவரை ஒரு கட்சியில் இருந்தவர் (வி.பி.துரைசாமி), அதற்கு முன் இன்னொரு கட்சியில் இருந்தவர் ஏதோ ஒரு ஆதாயம் கிடைக்கும் என்பதற்காக பாஜகவுக்குச் சென்றுள்ளார். அவர் சொல்வதெல்லாம் கருத்தா?

There is no need to reply to vp duraisamy...kp munusamy

அப்படி கருத்துச் சொல்ல அவருக்கு அந்தக் கட்சி அதிகாரம் கொடுத்துள்ளதா? நேற்று முன் தினம் பேட்டி அளித்த பாஜக மாநிலத் தலைவர் முருகன், அதிமுகவுடன் கூட்டணி அமைந்துள்ளது என்கிறார். பிறகு அந்தக் கேள்விக்கே இடமில்லை. அந்தக் கூட்டணி யார் தலைமையில் அமைந்தது. அதிமுக தலைமையில் தானே. அப்படிப்பட்ட கூட்டணிக்கு முருகனே ஒப்புதல் கொடுத்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios