சசிகலாவுக்கு எதிராக அதிமுக மாவட்டக் கழகங்களில் நாளை தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சசிகலாவுக்கு எதிராக அதிமுக மாவட்டக் கழகங்களில் நாளை தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அரசியல் களத்தில் இருந்து ஒதுங்கி இருப்பதாக தெரிவித்திருந்த சசிகலா கடந்த மாதம் முதல் தனது ஆதரவாளர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். ஒவ்வொரு தொண்டரிடமும், தான் விரைவில் உங்களை சந்திக்க இருப்பதாகவும், ஓபிஎஸ் மற்றும் எடப்பாடியின் அரசியல் நடவடிக்கைகள் தொண்டர்களுக்கு எதிராக இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த விவகாரம் அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. 

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான கடம்பூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- சசிகலா ஆடியோ விவகாரம் தொடர்பாக கடந்த 14ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தெளிவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்தத் தீர்மானத்தை வலியுறுத்தி நாளைய அதிமுக மாவட்ட கழகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தலைமைக்கு அனுப்பப்பட உள்ளது.

தீர்மானத்தில் இடம்பெறக்கூடிய அம்சங்கள் குறித்து அதிமுக தலைமைக்கழகம் இன்னும் அனுப்பவில்லை. அனுப்பிய உடன் அதனை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும்.அதிமுக மீது எந்த ஜாதி சாயத்தினையும் யாராலும் பூச முடியாது. அந்த மாதிரி குற்றச்சாட்டு ஒருநாள் செய்தியாகும். தவிர மக்கள் யாரும் நம்ப மாட்டார்கள் என்று தெரிவித்தார்.