Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் 16 சுங்கச்சாவடிகளுக்கு பதில் 48 உள்ளன... அமைச்சர் எ.வ.வேலு தகவல்..!

தமிழகத்தில் 16 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டும், ஆனால் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

There are 48 answers to 16 customs posts in Tamil Nadu ... Minister EV Velu informed ..!
Author
Tamil Nadu, First Published Sep 2, 2021, 12:39 PM IST

தமிழகத்தில் 16 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டும், ஆனால் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.There are 48 answers to 16 customs posts in Tamil Nadu ... Minister EV Velu informed ..!

இதுகுறித்து அவர், “தமிழகத்தில் மொத்தம் 48 சுங்கச் சாவடிகள் உள்ளது. இவை பெரும்பாலும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவற்றில் நகர்ப்புற பகுதிகளில் 14 சுங்கச் சாவடிகளும், புறநகர் பகுதிகளில் 9 சுங்கச் சாவடிகளும் உள்ளது. சென்னை நகர்புற பகுதிக்குள் உள்ள சென்ன சமுத்திரம், நெமிலி, வானகரம், பரனூர் மற்றும் சூரப்பட்டு ஆகிய 5 சுங்கச் சாவடிகளை கடக்க நீண்ட நேரம் ஆகிறது. அதை அகற்ற முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.There are 48 answers to 16 customs posts in Tamil Nadu ... Minister EV Velu informed ..!

இது தொடர்பாக ஒன்றிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கும் முதலமைச்சர் ஏத்கனவே கடிதம் எழுதியுள்ளார். கூட்டத்தொடர் முடிந்தவுடன் ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்து இதுகுறித்து பேசி உரிய நடவடிக்கை எடுக்க உள்ளோம்” எனத் தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios