ஒரு காலத்திலும் ஸ்டாலின் முதல்வராக முடியாது. அதற்கான முகலட்சணம் அவருக்கு கிடையாது’ என்று அண்ணா திராவிடர் கழகத்தின் மாநில செய்தித் தொடர்பாளர், தேனி கர்ணன் இணையத்தளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியின் கூறினார்.

சமீபத்தில் முன்னணி இணையத்தளம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில்;  கட்சியே வேண்டாம் என்று ஒதுங்கிய தினகரனை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்து ஆர்.கே.நகர் தேர்தலில் ஜெயிக்க வச்சோம், ஆனால் அவர் ஜெயிச்ச உடனே தனது முழு நடவடிக்கையையும் மாற்றிக் கொண்டார். அவர் தன்னைத்தானே அம்மாவாக நினைத்துக்கொண்டு கொண்டு செயல்பட ஆரம்பித்தார். அந்த மாற்றத்தால் தான், நான், நாஞ்சில் சம்பத், குண்டுகல்யாணம் என போன்ற பலர் கட்சியை விட்டு வெளியேறினோம். தற்போது புகழேந்தியும் வெளியேறிவிட்டார். 

மரியாதை இல்லை என்ற ஒரு காரணத்தினால் தினகரன் மீது அத்தனை பேருக்கும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. கட்சியை நிர்வாகம் செய்யக் கூடிய தகுதி தினகரனுக்கு இல்லை. அமமுக பொறுத்தவரை அது கிச்சன் கேபினட், இவரது மனைவி கிச்சனிலிருந்து ஒரு முடிவெடுப்பார்கள். அதேபோல அவரோட அசிஸ்டன்ட் ஜனா ஒரு முடிவெடுப்பார். அவங்களே தங்களுக்குள் குழப்பிக் கொண்டு கட்சி நிர்வாகிகளை அசிங்கப்படுத்துவங்க,‘சின்னம்மா சிறையிலிருந்து வந்த பின் இவை அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும். பிளவுபட்டுள்ள கட்சிகள் மீண்டும் இணைந்து ஒருங்கிணைந்த அதிமுக உருவாகும். 

அதேபோல, அதிமுக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்றோ, திமுகவுடன் உடன்படிக்கை வைக்க வேண்டும் என்றோ எங்களுக்கு எந்தவொரு எண்ணமும் இல்லை. ஒரு காலத்திலும் ஸ்டாலின் முதல்வராக முடியாது. அதற்கான முகலட்சணம் அவருக்கு இல்லை’ என்று இவ்வாறு கூறியுள்ளார்.