Asianet News TamilAsianet News Tamil

தேனி அரசு மருத்துவமனையில் தீ விபத்து.! கொரோனா நோயாளிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.!

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட  தீயணைப்புத் துறை  வீரர்  மூவருக்கு மருந்து குடோவுனில் இருந்து வெளியான நச்சுப்புகை தாக்கி மூச்சுதிணறல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
Theni Government Hospital fire accident.! Corona patients rescued safely.!
Author
Tamil Nadu, First Published Jul 24, 2020, 10:20 AM IST

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட  தீயணைப்புத் துறை  வீரர்  மூவருக்கு மருந்து குடோவுனில் இருந்து வெளியான நச்சுப்புகை தாக்கி மூச்சுதிணறல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Theni Government Hospital fire accident.! Corona patients rescued safely.!

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட  தீயணைப்புத் துறை  வீரர்  மூவருக்கு மருந்து குடோவுனில் இருந்து வெளியான நச்சுப்புகை தாக்கி,  மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது. இதனால் தேனி  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் உள் நோயாளிகள் பிரிவு அருகே உள்ள மருந்து குடோவுனில்  தீவிபத்து ஏற்பட்டதால் உள்நோயாளிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டார்கள்.

Theni Government Hospital fire accident.! Corona patients rescued safely.!

  தேனி மற்றும் ஆண்டிபட்டி தீயணைப்புத்துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.இந்த விபத்தில் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட  தீயணைப்புத்துறை வீரர்  ஒருவருக்கு  மருந்து குடோவுனில் இருந்து வெளியான நச்சுப்புகை தாக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக  அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும், நச்சுப்புகையால் உள்நோயாளிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, உள்நோயாளிகள்  மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். நோயாளிகள் அனைவரும் மருத்துவமனை வளாகத்தில் வரிசையாக அமர வைக்கப்பட்டனர். தீ விபத்து ஏற்பட்ட குடோன் அருகே கொரோனா நோயாளிகள் வார்டு மற்றும் ரத்த வங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தீவிபத்து  எப்படி ஏற்பட்டது என காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios