அவங்க சொந்தகாரங்களே கூப்பிட்டு போனவங்க பத்து பேருக்கு கூட சுத்துனாங்க.  அந்த சொந்தகாரங்க 10 பேர் ஷேர் பண்ணிக்கிட்டாங்க  என தேனி மாவட்ட மகளிரணி செயலாளர் சந்திராவிடம், ஆண்டிப்பட்டி ஒன்றிய இளைஞரணி துணைச்செயலாளரான கார்த்திக் புலம்பித தள்ளிய ஆடியோ வாட்ஸ் ஆப்பில் வைரலாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது!

தேமுதிகவைச் சேர்ந்த ஆண்டிப்பட்டி ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளராக கன்னியாபிள்ளை பட்டியைச் சேர்ந்த கார்த்திக்கும்,  மாவட்ட மகளிரணி செயலாளரான சந்திராவும் தனது சொந்த கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளிகள் செய்த உள்ளடசி வேலைகளை உரையாடல் மூலம் அம்பலப்படுத்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

அதில் பேசிய சந்திரா, மாவட்ட மகளிரணிதான் பேர். எந்த அளவுக்கு அசிங்கப்படுத்த முடியுமோ எந்த அளவுக்கு கேவலப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு கேவலப் படுத்தி நாங்களே வெளியேறனும்னு அவர் எவ்வளவோ செஞ்சாரு, ஆனால் அதை கண்டுக்காம துடைத்துப் போட்டுட்டுத்தான் இருக்கோம். நமக்கு நல்ல நேரம் வரும் நீ கொஞ்சம் தைரியமா இரு தம்பி, உழைப்பு வீண் போகாது. உன்னோட அக்காவா சொல்றேன் தயவுசெய்து வெளியே போகாத. 

கார்த்திக் பேசும்போது... நீங்களும் மாவட்ட பொறுப்பில் இருக்கிறீர்கள் உங்களுக்கு தெரியாதா? மாவட்ட செயலாளருக்கும், ஒன்றிய செயலாளருக்கும் பணம் போயிருக்காதா?  அவங்க  சொந்தக்காரங்க, கூட இருக்குறவங்களுக்கு பணம் கொடுத்திருக்காங்க. எலக்ஷன் இருந்து இன்றைக்கு வரைக்கும்  அவங்களுக்கு தொடர்ந்து போன் போட்டால் எடுப்பதே இல்ல.  திரும்ப கூப்பிடவும் இல்ல. அவங்க சொந்தகாரங்களே கூப்பிட்டு போனவங்க 10 பேருக்கு கூட சுத்துனாங்க.  அந்த சொந்தகாரங்க 10 பேர் கொடுத்த காசை ஷேர் பண்ணிக்கிட்டாங்க. இவங்க குடுக்குற பணத்தை வைத்து நம்ப குடும்பம் நடத்தலக்கா.  தலைவர் சொல்லிட்டார்னு அதை வச்சு நம்ம வேலை பார்க்கிறோம். இந்தமாதிரி ஆட்களை களையெடுத்தால் தான் தேனி மாவட்டத்தில் கட்சி நல்ல வளரும் என புலம்பித தள்ளியிருக்கிறார்.