Asianet News TamilAsianet News Tamil

வாக்குப்பதிவு எந்திரம் மாற்றம்..! மறுவாக்குப்பதிவு மர்மம்..! பூச்சாண்டி காட்டுகிறதா தேர்தல் ஆணையம்..?

திடீரென கணிசமான வாக்குப்பதிவு மையங்களில் மறுவாக்குப்பதிவு என்று அறிவித்து பீதி கிளப்பியுள்ளது தேர்தல் ஆணையம்.

Theni 50 voter machine.. election commission
Author
Tamil Nadu, First Published May 9, 2019, 9:44 AM IST

திடீரென கணிசமான வாக்குப்பதிவு மையங்களில் மறுவாக்குப்பதிவு என்று அறிவித்து பீதி கிளப்பியுள்ளது தேர்தல் ஆணையம்.

நேற்று முன்தினம் கோவையில் இருந்து திடீரென தேனிக்கு 50 வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. தேர்தல் முடிந்து சுமார் 20 நாட்கள் ஆகியுள்ள நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றப்பட்டது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அதிலும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிடும் தேமுதிக கோவையிலிருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது பல்வேறு யூகங்களை எழுப்பியது. Theni 50 voter machine.. election commission

காசியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசிய பிறகு தான் இந்த சம்பவங்கள் எல்லாம் நடப்பதால் இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று திமுக கொளுத்திப் போட்டது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் திடீரென செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு மறு வாக்குப்பதிவு காலை ஏற்பாடாகவே வாக்குப்பதிவு எந்திரங்கள் தேனி கொண்டு செல்லப்பட்டதாக கூறி வினோதமான விளக்கத்தைக் கூறினார். Theni 50 voter machine.. election commission

தேனியில் எந்த இடத்திலும் மறுபக்க பதிவிற்கான தேவையே இல்லாத நிலையில் இதற்காக வாக்குப்பதிவு எந்திரம் என்று திமுக தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து அவசர அவசரமாக செய்தியாளர்களை சந்தித்த சத்திய பிரதா சுமார் 49 வாக்குப்பதிவு மையங்களில் மாதிரி வாக்குப்பதிவில் பிரச்சினை ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் செய்த அந்தத் தவறை அங்கு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறி மறுபடியும் ஒரு பீதியை கிளப்பினார். Theni 50 voter machine.. election commission

இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விவகாரத்தை கூறி வாக்குப்பதிவு எந்திரம் மாற்றத்தை தேர்தல் ஆணையம் நியாயப்படுத்தியே வந்தது. இதனால் சர்ச்சை வலுத்த நிலையில் திடீரென 13 மையங்களில் மே 19-ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று இரவில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது தேர்தல் ஆணையம். வாக்குப்பதிவு எந்திரம் மாற்றம் தொடர்பான மர்மம் தீவிரமான நிலையில் அது தொடர்பான சர்ச்சையில் சமாளிக்கவே இந்த 13 இடங்களுக்கான மறுவாக்குப்பதிவு அறிவிப்பு என்று எதிர்க்கட்சிகள் சீறத் தொடங்கியுள்ளன. Theni 50 voter machine.. election commission

வாக்குப்பதிவு எந்திரம் இடமாற்றம் எனும் சர்ச்சையில் சிக்கி அந்த மரம் விஸ்வரூபம் எடுப்பதற்கு முன்னதாக மறுவாக்குப்பதிவு எனும் ஒரு நாடகத்தை அரங்கேற்றி அதனை அமுக்கிவிட வேண்டும் என்பதே தேர்தல் ஆணையத்தின் திட்டம் என்று திமுக வெளிப்படையாகவே கூறி வருகிறது. இந்த ஒரே ஒரு விவகாரத்தால் தமிழகத்தில் தேர்தல் நியாயமாகத்தான் நடந்ததா முடிவுகள் வெளிப்படையாக தான் இருக்கும் என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios