சி.ஏ.ஏ.,வுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததால் பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதற்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’கம்பத்தில் சி.ஏ.ஏ- விற்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் வாக்களித்ததற்காக எம்.பி.ரவிந்திரநாத் குமார் முஸ்லீம் வெறியர்களால் தாக்கப்பட்டார். அதேபோல் திருச்சி பாலக்கரை பகுதியில் சிஏஏ க்கு ஆதரவாக வீடு தொடரபு இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்ட பாலக்கரை பாஜக பகுதிச் செயலாளர் ரகு வெட்டிக்கொலை.

பாஜக திருச்சி பாலக்கரை பகுதிச் செயலாளர் ரகு அவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்னாரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்’’என அவர் தெரிவித்துள்ளார்.