பெரியார் பெயரால் வணிகம் செய்யும் போலி போராளிகளும் ஊருக்கு உபதேசம் மட்டும் செய்ய ஓடி வருவதேன்? என நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இதுகுறித்து அவர், ’’தமிழகத்தில் சாதி ஒழிப்பு பெயரளவில் உள்ளது.  ஆம், பெயருக்கு பின்னால் மட்டும் சாதியை ஒழித்துவிட்டோம். சாதனை கணக்கை கேட்டால் சாதிக் கணக்கு போட்டு சனங்களை ஏமாற்றுபவர்களும், பெரியார் பெயரால் வணிகம் செய்யும் போலி போராளிகளும் ஊருக்கு உபதேசம் மட்டும் செய்ய ஓடி வருவதேன்? ஆன்னா ஊன்னா பாப்பான், பார்பனீயம்,  பார்ப்பன அடிவருடின்னு வாந்தியெடுக்கறவங்க, நாயக்கருன்னு சொன்னதும் சாதியை சொல்லாதேன்னு  பதறுகிறீர்கள் பாருங்க... அதுதான் திருடனுக்கு தேள் கொட்டிய  திருட்டு திராவிடம். நீங்க முதலில் நிறுத்துங்க, அப்புறம் மத்தவங்கள திருத்தலாம்.

திராவிட இனத்தை எதிர்க்கவில்லை. தமிழினத்தின் அடையாளத்தை மறுக்கும் திராவிட சிந்தனையை அரசியலை எதிர்க்கிறேன். காந்திய எதிர்ப்பு பார்ப்பன வெறுப்பு பேசும் அவர்களை வைத்து பிழைக்கும் திருட்டுத்தனத்தை எதிர்க்கிறேன். தமிழகத்தை பொறுத்தவரை ஆரியம், திராவிடம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

 

ஆதிகுடிகளை தவிர மற்ற எல்லோரும் கலப்புதான். நீங்கள் திருடனா? இல்லையா? என்பது உங்கள் இனத்தால் அல்ல... உங்கள் சிந்தனையால், செயலால் வருவது. திராவிட சித்தாந்தம் திருடர்களின் கையில் சிக்கி சின்னாபின்னமாகிவிட்டது’’ என அவர் பதிவிட்டுள்ளார்.