ஜோதிமணி! -தி.மு.க.வை தாறுமாறகா அதிர்ச்சியடைய வைத்திருக்கும் பெயர் இதுதான். யார் இந்த ஜோதிமணி?...தி.மு.க.வின் மாஜி தலைவரான கருணாநிதியுன் மகள் வழி பேத்தியின் கணவர். டாக்டரான இவர் தி.மு.க. ஆட்சி காலத்திலேயே பல வித சர்ச்சைகளில் சிக்கினவராம். ஆனால் தற்போது ‘மணி டபுளிங்’ மாதிரி ‘எண்பது லட்சம் கொடுத்தால் ஒரு கோடி தருவோம்’ எனும் சீட்டிங் விவகாரத்தில் சிக்கி,  தலை உருளுகிறது. இவரது செயல்களுக்கும், தங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை! என்று முரசொலியில் கருணாநிதியின் மகள் செல்வியும், மருமகன் செல்வமும் சேர்ந்து பொது அறிவிப்பு கொடுக்குமளவுக்கு நிலை போயிருக்கிறது.  தி.மு.க.வினரால் தற்போது அதிகம் அசைபோடப்படும், அலசப்படும் மனிதராகி போயிருக்கிறார் டாக்டர் ஜோதிமணி. பிரபல புலனாய்வு அரசியல் வாரம் இருமுறை இதழொன்று ஜோதிமணி பற்றி எழுதியிருக்கும் ஹாட் தகவல்களின் ஹைலைட் பாயிண்ட்ஸ் இதோ....


*    டாக்டர் ஜோதிமணி மீது ஏகப்பட்ட புகார்கள், வம்பு வழக்குகள் சகஜம். காஞ்சிபுரம் மாவட்டம் தாளம்பூரில் 2.94 ஏக்கர் நிலைத்தை வளசரவாக்கத்தை சேர்ந்த நெடுமாறன் என்பவருக்கு சுமார் ஐந்து கோடியே பதினாலு லட்சத்துக்கு விலை பேசியிருக்கிறார் ஜோதிமணி. நெடுமாறனும் மூன்றரை கோடி அட்வான்ஸாக கொடுத்துவிட்டார். ஆனால் சொன்னபடி நிலத்தை அவருக்கு கொடுக்காமல், வேறொருவருக்கு பத்திரப்பதிவு பண்ணிவிட்டார். அங்கேயும் பணத்தை வாங்கிக் கொண்டார். ஏமாற்றப்பட்ட நெடுமாறன், பணத்தைக் கேட்டபோது அவரை மிரட்டி, அடித்துள்ளனர். நெடுமாறன் போலீஸில் புகார் செய்தார். இதில் ஜோதிமணி மற்றும்   அவரது மாமியாரான செல்வி மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு இப்பவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 
*    ஜோதிமணியின் தந்தை பெயர் ‘கப்பல்’ முருகேசன். இவர்களின் வீடு கோபாலபுரத்தில் கருணாநிதியின் வீடுக்கு பக்கத்திலேயே உள்ளது. அதனால் இரு குடும்பத்துக்கும் பழக்கம். ஜோதிமணியும், செல்வியின் மகள் எழிலரசியும் ஒன்றாகவே மருத்துவம் படித்துள்ளனர். அதில் நட்பு நெருக்கமாகி, காதலாகிவிட்டது. இந்த காதல் கருணாநிதியின் வீட்டுக்கு தெரிந்ததும் பெரும் பூகம்பம் வெடித்துள்ளது. 


*    ஜோதிமணியை எழிலரசிக்கு கட்டி வைக்க வேண்டாமென்று ஸ்டாலின் கடுமையாக எதிர்த்துள்ளார். செல்வி, செல்வத்துக்கும் இந்த திருமணத்தில் விருப்பமில்லை. 
*    இந்த காதல் தகராறில் ஜோதிமணியின் ஸ்கூட்டர் உடைக்கப்பட்டு, அவரும் தாக்கப்பட்டாராம். ஆனால் கருணாநிதி, அழகிரி இரண்டு பேரும்தான் இந்த காதலுக்கு பச்சை கொடி காட்டி, கல்யாணத்தில் முடித்து வைத்துள்ளனர். 
*    ஜோதிமணி அடிக்கடி பார்ட்டிக்கு செல்லும் வழக்கமுடையவர். அவரும் அடிக்கடி பார்ட்டி கொடுப்பார். அவர் தற்போது வைத்திருக்கும் காரின் விலை ஜஸ்ட் நான்கு கோடி ரூபாய், கையிலிருக்கும் வாட்சின் விலையே லட்சத்துக்கு மேல் இருக்கும். 
என்று நீள்கிறது..............


- இந்தியாவின் மிக முக்கிய குடும்பத்தின் மருமகன். கொட்டிக் கிடக்கும் பணம், அதிகாரம், டாக்டர் தொழில் என எல்லாம் இருந்தும் ஏன் ஜோதிமணி ‘சீட்டிங்’ செய்கிறார்?
இந்த கேள்விக்கு யார் பதில் சொல்வார்களோ!