சென்னையில் 16 தொகுதியின் வேட்பாளர்களின் பெயர், சின்னங்களை பொருத்தும் பணி வேட்பாளர்களின் முகவர்கள், நுண் பார்வையாளர்கள், அதிகாரி ஆகியோர் முன்னிலையில் சென்னை நந்தனம் கல்லூரில் நடைபெற்று வருகிறது.
சென்னையில் 16 தொகுதியின் வேட்பாளர்களின் பெயர், சின்னங்களை பொருத்தும் பணி வேட்பாளர்களின் முகவர்கள், நுண் பார்வை யாளர்கள், அதிகாரி ஆகியோர் முன்னிலையில் சென்னை நந்தனம் கல்லூரில் நடைபெற்று வருகிறது. வருகிற 6ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு ஈவிஎம் இயந்திரங்களில் பெயர் ,சின்னங்கள் தேர்தல் நடத்துனர் முன்னிலையில் பொருத்தப்பட்டது.

வேட்பாளர்களின் முகவர்கள், நுண் பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. ஒரு ஈவிஎம் இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் இருக்கும், சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பணிகள் துவங்கியது கட்டுப்பாட்டு அறையில் ஈவிஎம் இயந்திரங்கள் காவல்துறையினரின் பாதுகாப்புடன் வைக்கப்படுகிறது.

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் பெயர்கள், சின்னங்கள் முதலில் பொருத்தப்பட்டு, பின்னர் அகற வரிசையில் பொருத்தப்படுகிறது விவிபேட் இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகளும் முழுமையாக சோதனை செய்யப்படுகிறது. சென்னையில் 1,053 இடங்களில் 6,123 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 1,55,102 ஈவிஎம் மெசின்கள் தமிழகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு ஈவிஎம் இயந்திரத்தில் 1000 வாக்குகள் வரை பதிவு செய்துசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
