கோவை மாவட்டம், தேவராயபுரம் கிராமத்தில் திமுக கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கிராமசபைக் கூட்டத்தில் ஒரு பெண்ணிடம் எந்த ஊர் என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதற்கு அந்தப்பெண், ஊரே தெரியாமல் கிராம சபை கூட்டம் நடத்துகிறீர்களா? என கேள்வி எழுப்பினார். இதனால் கோபப்பட்ட மு.க.ஸ்டாலின், ‘’நீ வேலுமணி அனுப்பிய அ.தி.மு.க பெண் என சொல்லி வலுக்கட்டாயமாக கையைப்பிடித்து இழுத்துச்செல்ல மு.க.ஸ்டாலின் கூறினார். மேலும் அந்தப்பெண்ணை காவல் நிலையத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டார். 

 

கையைப்பிடித்து இழுந்து வெளியேற்றவும் உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன்படி அந்தப்பெண்ணை திமுக நிர்வாகிகள் கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதனால், கோபடைந்த அந்தப்பெண் திமுக ஒழிக என கோஷமிட்டபடி வெளியேறினார்.