Asianet News TamilAsianet News Tamil

வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்றுக்கொள்கின்றனர்.. கலைவாணர் அரங்கத்தில் ஏற்பாடுகள் தயார்.

முன்னதாக தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள கு.பிச்சாண்டி மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் ஆகியோர் கலைவாணர் அரங்கத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்க உள்ள 3 வது தளத்தை நேற்று பார்வையிட்டனர். 

The winning legislators are taking Swearing today .. Arrangements are being made at the kalaivanar arrangam.
Author
Chennai, First Published May 11, 2021, 9:23 AM IST

16வது சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்றுக்கொள்கின்றனர். ஏற்கனவே கோரோனா பெருந்தொற்று காரணமாக சட்டப்பேரவை கூட்டத் தொடர்கள் கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும்நிலையில் சட்ட மன்ற உறுப்பினர்களின் பதவி ஏற்பு விழாவும் கலைவாணர் அரங்கிலேயே நடைபெற உள்ளது. 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன்  ஆட்சி அமைத்துள்ளது. முதலமைச்சராக மு.க ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்களும் அன்றே பதவிபிரமாணம் எடுத்துக் கொண்டனர். இந்நிலையில்  தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் எம்எல்ஏக்கள் பதவி ஏற்றுக் கொள்கின்றனர். 

The winning legislators are taking Swearing today .. Arrangements are being made at the kalaivanar arrangam.

 அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க எனவே தற்காலிக சபாநாயகராக திமுகவைச் சேர்ந்த கீழ்பெண்ணாத்தூர் தொகுதி எம்எல்ஏ கு.பிச்சாண்டியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளார். இந்நிலையில் கு.பிச்சாண்டி முன்னிலையில் புதிய எம்எல்ஏக்கள் பதவி ஏற்றுக் கொள்கின்றனர். அதேபோல் நாளை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். 

முன்னதாக தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள கு.பிச்சாண்டி மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் ஆகியோர் கலைவாணர் அரங்கத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்க உள்ள 3 வது தளத்தை நேற்று பார்வையிட்டனர். 

The winning legislators are taking Swearing today .. Arrangements are being made at the kalaivanar arrangam.

மேலும் அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி. புதிய சபாநாயகர் நியமிக்கப்படும் வரை தன்னுடைய பணி 2 நாட்கள் தொடரும் என்று கூறினார். சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கோரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios