Asianet News TamilAsianet News Tamil

அதிமுகவை புகழ்ந்து தள்ளிய திமுக எம்.எல்.ஏ.,வுக்கு ஆப்பு... காங்கிஸுக்கு தள்ளிவிட முடிவு..!

எதிர்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் பொதுமக்களிடையே நேரடியாக அதிமுக அரசைப் பாராட்டி பேசியிருப்பது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

The wedge for the DMK MLA who praised the AIADMK ... decided to postpone it to the Congress
Author
Tamil Nadu, First Published Nov 11, 2020, 5:48 PM IST

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தொகுதிக்கு உட்பட்ட ஒதலவாடியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை குத்து விளக்கு ஏற்றி திமுக எம்.எல்.ஏ. கே.வி. சேகரன் தொடங்கி வைத்தார். சர்க்கரை, ரத்த அழுத்தம், மார்பக புற்றுநோய், கண், பல்நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி மக்களை கவர்ந்தது. The wedge for the DMK MLA who praised the AIADMK ... decided to postpone it to the Congress

அப்போது பேசிய கே.வி.ஞானசேகரன், ‘’வரும் முன் காப்பவன் தான் அறிவாளி என்பதற்கு இணங்க, தற்போதைய அரசு, மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது. அரசின் மக்கள் பயன்பாடு செயல்பாட்டை நாங்கள் வரவேற்போம். எம்.ஜி.ஆர்., ஒரு ஞானி. கருணாநிதியும் மக்களுக்கான கருத்தை எழுதியுள்ளார். இந்த அரசு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நாங்கள் எதிர்கட்சியாக இருந்தாலும் , மக்கள் நலனுக்காக அதிமுக அரசு செய்யும் திட்டங்கள் அனைத்தையும் வரவேற்போம் என தெரிவித்தார். எதிர்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் பொதுமக்களிடையே நேரடியாக அதிமுக அரசைப் பாராட்டி பேசியிருப்பது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. The wedge for the DMK MLA who praised the AIADMK ... decided to postpone it to the Congress

இதை, அவரது எதிர் கோஷ்டியைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, தி.மு.க., தலைமையிடம், பற்ற வைத்து விட்டதாக கூறப்படுகிறது. ஆகையால் வரும் சட்டசபை தேர்தலில், போளூர் தொகுதியை, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி விட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios