வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியம், அம்முண்டி ஊராட்சி வாக்குப்பதிவு மையத்தில் ஒரு வாக்காளர் கூட வாக்களிக்காத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியம், அம்முண்டி ஊராட்சி வாக்குப்பதிவு மையத்தில் ஒரு வாக்காளர் கூட வாக்களிக்காத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஊரக உள்ளாட்ட்சி தேர்தல் 9 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. அதன் படி இன்று முதல் கட்டமாக நடைபெற்றது. அதன்படி வேலுர் மாவட்டம், காட்பாடி ஒன்றியம் அம்முண்டி ஊராட்சியிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆனால் அங்குள்ள 2049 வாக்காளர்களில் ஒருவர் கூட இதுவரை வாக்களிக்க வரவில்லை. அம்முண்டி ஊராட்சியின் 9 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய குழு உறுப்பினர், பதவிகளுக்கு வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில் அவர்களுக்கும் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை. வாக்காளர்களாக உள்ள அரசு ஊழியர்கள் 65 பேரை வாக்களிக்க வைக்கும் அதிகாரிகளின் முயற்சியும் தோல்வி அடைந்துள்ளது.