தேர்தல் பரப்புரையின் போது மச்சான் மாமன் என உறவுகளாக மாறி தேர்தல் பறக்கும் படைக்கு அல்வா கொடுத்து அதிரவைத்திருக்கிறார்கள் தேமுதிக தொண்டர்கள்.  

தேர்தல் பரப்புரையின் போது மச்சான் மாமன் என உறவுகளாக மாறி தேர்தல் பறக்கும் படைக்கு அல்வா கொடுத்து அதிரவைத்திருக்கிறார்கள் தேமுதிக தொண்டர்கள். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred



தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்து இது வரை குத்து மதிப்பாக 80 கோடிவரை தமிழகத்தில் பறிமுதல் செய்துள்ளனர். ஆனாலும் பணப்பட்டுவாடாவை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்களின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய சம்பவம்தான் ஆம்பூர் பிரியாணியை போல் கமகமக்கிறது. ஆம்பூரில் பேருந்து கார், வேன் ஆகியவற்றை பறக்கும்படையினர் நிறுத்தி சோதனை செய்யும்போது அவர்களிடம் மக்கள், ‘சார் எங்ககிட்ட எங்க இருக்கு பணம். 

ஒரு நையா பைசா இல்லை. நீங்க எதாவது பறிமுதல் செஞ்சி வைச்சிருந்தீங்கன்னா கொடுத்துட்டு போங்க’ எனக் கூறி விட்டனர். அதேபோல் நேற்று முன்தினம் அமமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆம்பூர் வந்து பேசி முடித்ததும் அழைத்து வரப்பட்ட கூட்டத்தினரிடம் கட்சி நிர்வாகிகள் பணத்தை வழங்கிக் கொண்டிருந்தார்கள்.

இதை பார்த்து அங்கு சென்ற பறக்கும்படையினர் அவர்களை கண்காணித்துக் கொண்டிருந்தனர். இதை அமமுக தொண்டர்கள் சமயோசிதமாக, ’ஒருவருக்கொருவர், மாமா, மச்சான், அண்ணா என்ற முறையோடு பேசிக் கொண்டனர். பறக்கும் படையினரை பார்த்து, ‘சார், என்ன பார்க்கிறீங்க. இது எங்க மாமா, அவர் எனக்கு பணம் தர வேண்டும். அதைத்தான் தருகிறார். இதை பறிச்சிடுவீங்களா?’ என்று கேட்டு அசர வைத்தார்களாம். எதுவும் சொல்லமுடியாத பறக்கும் தேர்தல் படையினர் கிளம்பி விட்டதாக ஆம்பூர்வாசிகள் அங்கலாய்க்கிறார்கள்.