திமுக நடத்தும் மக்கள் கிராம சபை கூட்டத்தை பார்த்து ஆளுங்கட்சியினர் ஆடிப்போயுள்ளனர். என்ன தடை போட்டாலும் அதை உடைப்பவர்கள் நாங்கள் என மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பேசியுள்ளார். 

ராணிப்பேட்டை மாவட்டம் அனந்தலை கிராமத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அதிமுகவை நிராகரிக்கவும் என்ற தலைப்பில் மக்கள் சபைக் கூட்டம் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். அப்போது, பேசிய மு.க.ஸ்டாலின்;- விளம்பரத்தில் தமிழ்நாடு எல்லா துறையிலும் முதலிடத்தில் உள்ளது என்று போட்டுள்ளனர். ஆனால், தற்போது ஊாலிலும், கொலை, நகை, பணம் கொள்ளை அடிப்பதும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 

கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவை காட்டிலும் அதிமுகவினர் ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மத்தை வெளிக்கொண்டு வருவோம். முதல்வர் பதவி பறிபோனதான் காரணமாகத்தான் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து சாவில் மர்மம் இருப்பதாக போராட்டம் நடத்துவது போல் நாடகமாடி துணை முதல்வர் பதவியை பெற்றார். கிராம சபை கூட்டங்களுக்கு மக்கள் கூடுவதை பார்த்து அஞ்சி தடை போடுகிறது அதிமுக அரசு. அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளும் மோசமான நிலையில் உள்ளன. பெண்ணாக இருந்தாலும் தைரியமானவர் என்பதால் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினேன்.

பொங்களுக்கு அரசு 2500 வழங்குவதாக அறிவித்து இருக்கிறார்கள். ஆனால் திமுக 5000 ஆக உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது தேர்தல் நேரத்தில் அதிமுகவினர் கட்சிப் பணத்தை எடுத்து மக்களுக்கு வழங்குவதைப் போல் அரசின் பணத்தைக் கொடுத்து மக்களிடத்தில் நன்மதிப்பைப் பெற்று விடலாம். வாக்குகளையும் பெற்று விடலாம் என்று நினைக்கின்றனர் அது நடக்கப் போவதில்லை. 

அரசின் பணத்தை அதிமுகவினர் மக்களுக்கு வழங்குவதில் திமுகவிற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை அதை முறையாக ஒழுங்காக நியாயமாக மக்களுக்கு வழங்க வேண்டும் என்பது தான் திமுகவின் கோரிக்கை. ஆனால், முதல்வர் திமுக இந்த திட்டத்தைத் தடுக்க முயற்சி செய்வதாகப் பொய்க் குற்றச்சாட்டுகளை மக்களிடையே பரப்பி வருகின்றார் என விளக்கமளித்துள்ளார்.