அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிக்கப்படும்போது, அண்மையில் சித்தியடைந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திரருக்கு சிலை வைக்க வலியுறுத்துவேன் என்று பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

1954 ஆம் வருடத்தில் இளைய மடாதிபதியாகப் பொறுப்பேற்ற ஜெயேந்திரர், மகா பெரியவர் என்று அழைக்கப்பட்ட சந்திரசேகரேந்திரர் மறைவுக்குப் பிறகு 1994-ம் ஆண்டு காஞ்சி சங்கர மடத்தின் 69-வது மடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். 

கடந்த பல வருடங்களாகவே அவருக்கு சர்க்கரை நோய் இருந்துவந்தது. அதற்கென சிகிச்சைகளும் எடுத்துக் வந்தார். இந்த நிலையில், ஜெயேந்திரருக்கு மாரடைப்பு மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும், சிகிச்சை பலனின்றி ஜெயேந்திரர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக உயிரிழந்தார். அவரது, உடல் காஞ்சியில் உள்ள பிருந்தாவனில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் காஞ்சியின் 70-வது மடாதிபதியாக விஜயேந்திரர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிக்கப்படும்போது, சித்தியடைந்த காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரருக்கு சிலை வைக்க வலியுறுத்துவேன் என்று பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிக்கப்படும்போது, சித்தியடைந்த காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதிக்கு சிலை வைத்து, ராமர் கோயில் தொடர்பான அவருடைய பங்களிப்பை நினைவுக்கூற வலியுறுத்துவேன் என்று பதிவிட்டுள்ளார்.