The Speaker is proud of the AIADMK

பேரவையில் ஜெயலலிதா படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்ததில் எங்களுக்கு பெருமை என அவர் தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் சபாநாயகருக்கு நினைவு பரிசு வழங்கினர். 

ஜெயலலிதாவின் 7 அடி உயரம், 5 அடி அகலம் கொண்ட முழு உருவப்படம் திறக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் உருவப்படத்தின் கீழே அமைதி, வளம், வளர்ச்சி என்ற சொற்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

அதிமுகவினரின் இத்தகைய செயலுக்கு எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு தெரிவித்து புறக்கணிப்பு செய்தனர். பேரவையில் எதிர்க்கட்சியினர் இருக்கைகளில் அதிமுக எம்.பி.,க்கள் அமர வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்பட திறப்பு விழாவில் ஜெயலலிதாவின் வாய்ஸ் ஒலிபரப்பட்டது. அதில் ஜெயலலிதா பேசிய வாக்கியங்கள் ஒலிபரப்பப்பட்டன. 

இதைதொடர்ந்து ஜெயலலிதா படத்தை திறக்க மோடி, ராம்நாத் கோவிந்த், பன்வாரிலால் புரோகித் ஆகியோருக்கு அழைப்பு விடுத்தும் அவர்கள் வராததிற்கு காரணம் ஜெயலலிதா குற்றவாளி என்பதால் தான் என ஸ்டாலின் கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார். 

அதனால் தான் சாபநாயகர் தனபாலை வைத்து திறந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டார். 

இந்நிலையில், பேரவையில் ஜெயலலிதா படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்ததில் எங்களுக்கு பெருமை என அவர் தெரிவித்துள்ளார்.