மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவுக்கு டெல்லியில் 2வது திருமணம் நடைபெற்றது. முதல் கணவரை விவாகரத்து செய்த சசிகலா புஷ்பா ராமசாமி என்பவருடன் 2வது திருமணம் செய்துகொண்டுள்ளார். 

சில தினங்களுக்கு முன்பு அதிமுகவில் இருந்து ஜெயலலிதா இருக்கும்போதே நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவுக்கும் ஓரியண்டல் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் இணை துணைவேந்தர் ராமசாமி என்பவருக்கும் திருமணம் வரும் மார்ச் 26ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் என வாட்ஸ் அப்பில் தீயாக பரவியது ஓர் திருமண அழைப்பிதழ்.

மாப்பிள்ளையான ராமசாமி நாடாளுமன்றத்தின் சட்ட ஆலோசகராக உள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சசிகலா புஷ்பா -ராமசாமி திருமண வரவேற்பு என்று குறிப்பிடப்பட்டு செய்திகள் வந்து கொண்டிருக்க மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மகாளிபட்டியிலிருந்து கைக்குழந்தையோடு வந்த சத்யப்பிரியா தமக்கும் சசிகலா புஷ்பா திருமணம் செய்ய உள்ள ராமசாமிக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டே திருமணம் முடிந்துவிட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார். 

மேலும ஒரு வருடம் தான் ராமசாமியாேடு சேர்ந்து வாழ்ந்ததாகவும், அதன் பிறகு ஏற்பட்ட குடும்ப பிரச்சனையால் என்னை தந்தை வீட்டிற்கு அனுப்பி வைத்த அவர் பாேன் மூலம் தன்னிடம் பேசி வந்தாகவும் குறிப்பிட்டார். 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்ததோடு நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மதுரை குடும்பநல நீதிமன்றம் சசிகலா புஷ்பா ராமசாமியை திருமணம் செய்ய தடை விதித்து உத்தரவிட்டது. 

இந்நிலையில் டெல்லியில் நட்சத்திர ஓட்டலில் சசிகலா புஷ்பா-ராமசாமி திருமணம் நடைபெற்றுள்ளது.