Asianet News TamilAsianet News Tamil

வெற்றிபெற்று விடுவோம் என்கிற இறுமாப்பா..? ஸ்டாலினின் முதல்வர் கனவை தரைமட்டமாக்கும் திமுக நிர்வாகிகள்..!

ஆபாச பேச்சு சர்ச்சையில் சிக்கினார் தயாநிதி மாறன். லியோனி, ஆ.ராசா வரிசையில் திமுகவுக்கு நெருக்கடி முற்றுகின்றது.

The scorn that we will win ..? DMK executives to level Stalin's CM dream ..!
Author
Tamil Nadu, First Published Mar 30, 2021, 11:38 AM IST

ஆபாச பேச்சு சர்ச்சையில் சிக்கினார் தயாநிதி மாறன். லியோனி, ஆ.ராசா வரிசையில் திமுகவுக்கு நெருக்கடி முற்றுகின்றது.

நேற்று முதல்வரின் தாயாரை கேவலப்படுத்தி  தி மு கவின் ஆ.ராசா அவர்கள் தரக்குறைவாக பேசியிருக்கும் நிலையில், இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும், பிரதமரையும் தொடர்புபடுத்தி தயாநிதிமாறன் தரக்குறைவாக பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.The scorn that we will win ..? DMK executives to level Stalin's CM dream ..!

ஜெயலலிதா அம்மா, மோடி அப்பா என்றால் என்ன உறவுமுறை?- பிரச்சாரத்தில் தயாநிதிமாறன் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து பெண்களை இழிவாக பேசும் தி.மு.க.,வை மக்கள் புறக்கணிக்க வேண்டும். ஆக்கபூர்வமான ஆரோக்கிய அரசியலை முன்னெடுக்க முடியாத தி.மு.க.,வினர், தனிமனித தாக்குதல் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமையை செய்வது அராஜக அரசியலே. இந்த பேச்சுக்களுக்கு காரணம்  தோல்வி பயமா அல்லது வெற்றி பெற்று
விடுவோம் என்ற இறுமாப்பா? தி மு க கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் இந்த அநியாய போக்கினை கண்டிக்கவில்லையென்றால் காலம் உங்களை மன்னிக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.The scorn that we will win ..? DMK executives to level Stalin's CM dream ..!

தி மு க தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆ.ராசா மற்றும் தயாநிதி மாறனை கட்சியிலிருந்து நீக்க வேண்டும். தேர்தல் ஆணையமும் மற்றும் நீதிமன்றமும், இருவரின் கருத்துக்களையும் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து தகுந்த தண்டனையை வழங்க வேண்டும். இருவரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் பறிக்க ஆவண செய்யவேண்டும். அ தி மு கவினரும், பாஜகவினரும் ஆவேசப்படாமல் அதே நேரத்தில் பெண்கள் விரோத  தி.மு.க.,வின் உண்மை முகத்தை மக்களிடம்  தோலுரித்து காட்ட வேண்டும்.The scorn that we will win ..? DMK executives to level Stalin's CM dream ..!

நேற்றுதான் திமுக தலைமை கட்சியினருக்கு நாவடக்கம் தேவை என சொன்ன நிலையில் தயாநிதிமாறன் இப்படி பேசுவது என்றால் என்ன அர்த்தம்? என பலரும் தயாநிதி மாறனுக்கு எதிராக கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios