அதிமுக ஆட்சியில் நடந்த அதே தவறு.. திமுக ஆட்சியில் நடக்கிறது.! சீறும் நாம் தமிழர் சீமான்

கடந்த அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள் என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசு அலுவலர்களின் வாழ்க்கையோடு திமுக அரசு விளையாடுவது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும் என்று கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமான்.

The same mistake that happened in the AIADMK regime is happening in the DMK regime says Seeman

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நூறு நாள் வேலை திட்டங்களைக் கண்காணித்து முறைப்படுத்துவதற்காக பணியமர்த்தப்பட்ட மாவட்ட மற்றும் வட்டார வளங்களை அரசாணை மூலம் திமுக அரசு ஒரே நாளில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள் என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசு அலுவலர்களின் வாழ்க்கையோடு திமுக அரசு விளையாடுவது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும். கடந்த 2014ஆம் ஆண்டு 22 மாவட்ட மற்றும் 543 வட்டார வள அலுவலர்கள் என மொத்தம் 565 வள அலுவலர்கள் போட்டித்தேர்வு மூலம் முறையாகப் பணி நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வந்தனர். 

The same mistake that happened in the AIADMK regime is happening in the DMK regime says Seeman

அவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படாததோடு, கடந்த ஓராண்டாக அடிப்படை ஊதியமும் வழங்க மறுத்து திமுக அரசு அப்பட்டமான தொழிலாளர் விரோதப்போக்கை கடைபிடித்தது. கடந்த 9 ஆண்டுகளாக மிகக் குறைந்த ஊதியம் கொடுத்து அவர்களின் உழைப்பை சுரண்டிவிட்டு, தற்போது ஒரே நாளில் நிரந்தரமாக திமுக அரசு நீக்கியிருப்பது கொடுங்கோன்மையாகும். 

வள அலுவலர்கள் 10 ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பணி புரிந்தால் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற நிலையில், தற்போது 9 ஆண்டுகள் முடிந்த நிலையில், திடீரென அவர்கள் அனைவரையும் அரசாணை மூலம் பணி நீக்கம் செய்துவிட்டு புதிதாகப் பணியாளர்களை நியமிக்க திமுக அரசின் முடிவு முழுக்க முழுக்க அரசு ஊழியர்களைப் பழிவாங்கும் நடவடிக்கையே ஆகும்.

பி.எம் கிசான் திட்டம்.. ஒவ்வொரு மாதமும் ரூ.3000 கிடைக்கும்.! விவசாயிகள் செய்ய வேண்டியது இதுதான்.!

ஏற்கனவே, 1996-ம் ஆண்டு திமுக அரசால் நியமிக்கப்பட்ட 13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்கள், பின்னர் வந்த அதிமுக அரசுப் பணியிலிருந்து நீக்கப்பட்டது, திமுக அரசு மீண்டும் பணியில் சேர்ப்பது என கடந்த 33 ஆண்டுகளாக இரு திராவிட அரசுகளும் மாறி மாறி மக்கள் நலப்பணியாளர்களின் வாழ்வினையே முற்றிலுமாக சிதைத்து இருளில் தள்ளியுள்ளது. அப்படி ஒரு நிலைமை வள அலுவலர்களுக்கும் ஏற்படாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு, கடமையும் திமுக அரசுக்கு உண்டு. 

ஆகவே, திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியைக் கைவிட்டு, 560 மாவட்ட மற்றும் வட்டார வள அலுவலர்களின் குடும்ப வாழ்வாதார சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, அவர்களை பணிநீக்கம் செய்ய அரசாணையை உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்துகிறேன். மேலும், அவர்கள் அனைவருக்கும் எந்த நிபந்தனையுமின்றி மீண்டும் பணியில் சேர்த்து, உரிய ஊதியம் வழங்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
சிபிஐயின் அடுத்த குறி முதல்வர் ஸ்டாலின்.. 200 கோடி விவகாரத்தை கிளப்பும் அண்ணாமலை - மீண்டும் பரபரப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios