இன்று பரமக்குடி எம்.எல்.ஏ  சதன் பிரபாகரனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அடுத்து உளுந்தூர்பேட்டை அதிமுக எம்.எல்.ஏ., குமரகுருவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பரமக்குடி எம்.எல்.ஏ  சதன் பிரபாகரனுக்கு கொரோனா இன்று உறுதி செய்யப்பட்டது. அவரது மனைவி, மகன், உதவியாளருக்கும் கொரோன உறுதி செய்யப்பட்டது. இந்த அதிர்ச்சித் தகவலை அடுத்து உளுந்தூர் பேட்டை அதிமுக எம்.எல்.ஏ குமரகுருவுக்கும் கோரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 4 தினங்களுக்கு முன் முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் குமரகுரு பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் மொத்தம் 8 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா தொற்று உறுதி. ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.
 
அடுத்தடுத்து எம்.எல்.ஏ.,க்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருவதால் ஆளும் கட்சி, எதிர்கட்சி எம்.எல்.ஏக்களும் கலக்கமடைந்துள்ளனர்.