ரஜினி எதற்கும் தாமதமாகவே கருத்து தெரிவிப்பார். ஆனாலும் இரண்டு நாட்களுக்கு அதுதான் பேசுபொருளாக இருக்கும். அப்படித்தான் கந்த சஷ்டி கவசம் குறித்த ரஜினியின் கருத்தும்  இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. 

ரஜினி எதற்கும் தாமதமாகவே கருத்து தெரிவிப்பார். ஆனாலும் இரண்டு நாட்களுக்கு அதுதான் பேசுபொருளாக இருக்கும். அப்படித்தான் கந்த சஷ்டி கவசம் குறித்த ரஜினியின் கருத்தும் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

Scroll to load tweet…

கந்த சஷ்டி கவசம் குறித்து கேவலமாகவும், ஆபாசமாகவும் சித்தரித்த கறுப்பர் கூட்டத்தை கண்டித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’கந்தசஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதை புண்படுத்தி கொந்தளிக்க செய்த, அந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி, செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். இனிமேலாவது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்..ஒழியணும். எல்லா மதமும் சம்மதமே.!! கந்தனுக்கு அரோகரா.!! என பதிவிட்டு இருந்தார். 

Scroll to load tweet…

#கந்தனுக்கு_அரோகரா என்கிற ஹேஷ்டேக்கையும் உருவாக்கி இருந்தார். இந்நிலையில் இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Scroll to load tweet…