சிதம்பரத்தில் சாதி வெறியரான திமுக துணை தலைவரால் அவமானப்படுத்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவவி ராஜேஸ்வரி தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே தெற்கு திட்டை ஊராட்சி ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. இவர் ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர். இந்த நிலையில் துணைத் தலைவராக உள்ள மாற்றுச் சமூகத்தைச் சார்ந்த மோகன்ராஜான் என்பவர் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி மற்றும் அதே சமூகத்தில் உள்ள வார்டு உறுப்பினர் சுகந்தி ஆகிய இருவரையும், ஊராட்சி கூட்டங்களில் தரையில் அமர வேண்டும் எனவும், தேசியக்கொடி ஏற்றக் கூடாது எனவும் உத்தரவிட்டு ஊராட்சி நிர்வாகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஊராட்சி தலைவரை எந்தப் பணியும் செய்யவிடாமல் தடுத்து அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.

சாதி வெறியுடன், ஊராட்சி மன்றத் தலைவரை பணி செய்ய விடாமல் தொடர்ந்து இது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார் மாற்றுச்சமூகத்தைச் சேர்ந்த திமுக ஊராட்சி துணை தலைவர் மோகன்ராஜன். இந்நிலையில் கடந்த ஜூலை 17ஆம் தேதி ஊராட்சிமன்ற கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஊராட்சி தலைவர், ஊராட்சி துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர்.

இந்த கூட்டத்தின் போது ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்டார். இது தொடர்பான புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளியானது. துணைத் தலைவராக இருந்து இந்தச் செயல்களைச் செய்தவர் திமுக கட்சியை சேர்ந்தவர் எனவும் கூறப்படுகிறது.  இந்நிலையில், ஊராட்சி மன்ற தலைவவி ராஜேஸ்வரி தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார்.