கர்நாடகவில் காங்கிரஸ்- மஜத கூட்டணி ஆட்சி கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகாவில் அரசியல் சூடிபிடிக்க தொடங்கியுள்ளது. கர்நாடகாவில் மஜத எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு எதிர்பார்த்த அளவு கணிசமான எம்.எல்.ஏ.க்கள் வராததையடுத்து பரபரப்பு நிலவி வருகிறது. இதனால் காங்கிரசார் முன்னாள் முதல்வர் சித்தராமையா தலைமையில் தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி அவசர ஆலோசனை நடத்தி உள்ளனர்.

கர்நாடகாவில், ஆளும் காங்கிரஸ்- மஜத கூட்டணி எம்.எல்.ஏ.க்களை இழுக்க பாஜவினர் முயற்சிகள் மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் கசிந்தன. இதனிடையே அவசரமாக மஜத எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. ஆனால் இதில் 37 எம்.எல்.ஏ.க்களில் 17 பேர் மட்டும் கூட்டத்திற்கு வந்திருந்தனர். 20 பேர் கூட்டத்துக்கு பங்கேற்கவில்லை இதனால் குமாரசாமி அதிர்ச்சியடைந்தார். 

20 எம்எல்ஏ நிலை குறித்து தெரியாமல் குமாரசாமி விழி பிதுங்கினார். ஒரு கட்டத்தில் மஜதவை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் என்னிடம் சொல்லிவிட்டு தான் வெளியூர் பயணம் மேற்கொண்டுள்ளனர் என தகவல் தெரிவித்தார். மஜத எம்.எல்.ஏ.க்கள் காணாமல் போனதை அறிந்த காங்கிரசார் முன்னாள் முதல்வர் சித்தராமையா திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

இதற்கிடையே, சந்தேகத்துக்கு ஆளாகி இருக்கும் மஜத எம்.எல்.ஏ.க்கள் சென்னை வழியாக விமானம் மூலம் மும்பைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மஜத மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே பீதி ஏற்பட்டுள்ளது.