the reason for sasikala to go to jail is ttv dinakaran and venkatesh
சசிகலா சிறைக்குச் செல்ல டி.டி.வி.தினரனும், வெங்கடேசும்தான் காரணம் என்றும், சசிகலாவுக்கு முதலமைச்சர் மற்றும் பொதுச் செயலாளர் ஆசை காட்டி நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார்கள் என்றும் சசிகலாவின் சகோதரர் விகரன் தெரிவித்துள்ளார்.
சசிகலாவின்குடும்பத்தில்அவரதுசகோதரிமகன்டி.டி.வி.தினகரன்மற்றும்சகோதரர் திவாகரன்இடையேயானமோதல்வெட்டவெளிச்சமாகியுள்ளது. அம்மாமக்கள்முன்னேற்றக்கழகத்தைஏற்கமுடியாதுஎனதிவாகரன்கூறியுள்ளநிலையில், கட்சிக்குஎதிராகசெயல்படுபவர்கள்உறவினர்கள்என்றால்கூடதூக்கிஎறிந்துவிடுவேன்எனடி.டி.வி.தினகரன்எச்சரித்துள்ளார்.


இந்நிலையில் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன், சசிகலா அவர்கள் டி.டி.வி.தினகரனையும். வெங்கடேசையும் தனது இரு கண்கள் போல் நினைத்தார். ஆனால் அவர்கள் இருவரும் சேர்ந்து சசிகலாவுக்கு முதலமைச்சர் மற்றும் பொதுச் செயலாளர் ஆசை காட்டி ஏமாற்றிவிட்டனர் என்றார்.
மேலும் சசிகலா சிறைக்கு செல்ல காரணமே டி.டி.வி.தினகரன்தான் என்றும் குற்றம்சாட்டிய திவாகரன், இன்னும் 6 மாதத்தில் அவர் தனிமரமாக நிற்பார் என்றும் குறிப்பிட்டார்.
ஓபிஎஸ்ம் இபிஎஸ்ம் அணிகளை இணைத்து சட்சியையும், கொடியையும், சின்னத்தையும் மீட்டுவிட்டனர் என அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
புதிய கட்சி தொடங்கும் எண்ணமில்லை என்றும் அம்மா அணிக்கு புது ரத்தம் பாய்யச்சப்படும் என்றும், அந்த அணியை தொடர்ந்து வழி நடத்துவேன் என்றும் திவாகரன் தெரிவித்தார்.
