உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற 2 மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்ததற்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தான் காரணம் என அக்கட்சியின் எம்,பி. சுப்ரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.

வட இந்திய மாநிலங்களில் பெரும்பாலானவை பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், உத்தரபிரதேசம் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற மக்களவை இடைத்தேர்தலில் பாஜக அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. குறிப்பாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடர்சியாக 5 முறை வெற்றி பெற்ற கோரக்பூர் தொகுதியிலும் பாஜக தோல்வி அடைந்தது. 

இந்த இடைத்தேர்தலில் பாஜக  தோல்வி அடைந்ததற்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தான் காரணம் என பாஜக  மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி  குற்றம்சாட்டியுள்ளார்..

இது தொடர்பாக செய்தியாள்களிடம் பேசிய அவர்,  தனது சொந்த தொகுதியில் பாஜகவை ஜெயிக்க வைக்க முடியாதவர்களுக்கு முதலமைச்சர்  பதவி கொடுப்பது பற்றி பாஜக ஆட்சி மன்றக் குழு நிச்சயம் மறுபரிசீலனை செய்ய வேண்டும், என கூறியுள்ளார். 

இதேபோல், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ராம்கந்த் யாதவும் யோகி ஆதித்யநாத்தை மிக கடுமையாக  விமர்சித்துள்ளார்.