திமுக சட்டமன்றத்தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் தேவர் குருபூஜைக்கு சென்ற ஸ்டாலின் திருநீறு பூச மறுத்ததையும் இன்னொரு இடத்தில் பூசி திருநீறை அழித்ததையும் இணைதள நெட்டிசன் சமூக வலைதளததில் வைரலாக்கி வருகின்றனர்.இந்த சம்பவம் முக்குலத்தோர் மக்களிடம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் கனிமொழி பதிவிட்ட ட்விட்டர் பதிவில்.. தேவரின் அடையாளமான நெற்றியில் திருநீறு அணிவதை தவிர்த்து வெறும் நெற்றியில் இருக்கும் தேவர் படத்தை பதிவிட்டிருந்தார். இந்த படமும் திமுகவுக்கு எதிராக வைரலாகிக் கொண்டிருக்கிறது.

இந்தநிலையில்,தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள விளாத்திகுளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி.  கனிமொழி, “பாஜக எதற்காக இயங்குகிறது, அதன் உண்மையான முகம் என்ன என்பதை மக்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள். பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படைக் கொள்கை வெறுப்புணர்வை தூண்டி, வாக்கு வங்கிகளாக மாற்றும் அரசியலை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.இதனை தமிழகம் என்றும் ஏற்றுக்கொள்ளாது. இப்படிப்பட்ட அரசியலை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதை பாரதிய ஜனதா கட்சி புரிந்து கொள்ள வேண்டும். யார் வேண்டுமானாலும் தங்களை எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம். அடிப்படையில் அந்த இயக்கம் எதற்காக நிற்கிறது. அந்த இயக்கத்தின்  உண்மையான முகம் என்ன என்பதை மக்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள்” என்றார்.