Asianet News TamilAsianet News Tamil

அடுத்த 4 நாட்களுக்கும் தொடரும் மழை.. அடுத்த 24 மணிநேரத்தில் இந்த 15 மாவட்டங்களில் அடித்து ஊற்றப் போகிறது.

இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும்,

The rain will continue for the next 4 days. It is going to hit these 15 districts in the next 24 hours.
Author
Chennai, First Published Jan 8, 2021, 2:21 PM IST

இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

9-1-2021 தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய  கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. 

The rain will continue for the next 4 days. It is going to hit these 15 districts in the next 24 hours.

10-1-2019 ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக  கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருநெல்வேலி மற்றும் புதுச்சேரியில்  கன மழையும் ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

11-1-2020 அன்று  ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம்,  திருநெல்வேலி மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கனமழையும் ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

The rain will continue for the next 4 days. It is going to hit these 15 districts in the next 24 hours.

12-1-2019 தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸகவும் இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும். 

The rain will continue for the next 4 days. It is going to hit these 15 districts in the next 24 hours.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக ஆண்டிபட்டி (தேனி) நத்தம் (திண்டுக்கல்) புலிப்பட்டி (மதுரை) தல 6 சென்டி மீட்டர் மழையும், குறைந்தபட்சமாக அதிராமபட்டினம் (தஞ்சாவூர்) குன்னூர் (நீலகிரி) செய்யூர் (செங்கல்பட்டு) மதுரை விமானநிலையம், பாபநாசம் (திருநெல்வேலி) வால்பாறை (கோவை) சிவகிரி (தென்காசி) தல 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios