Asianet News TamilAsianet News Tamil

குடியுரிமை பெற்ற தமிழர்கள் பெறும் திட்டங்கள், முகாமில் வசிக்கும் தமிழர்களுக்கும் கிடைக்க வேண்டும்.. பிடிஆர்

மேலும் சில நாட்களுக்கும் முன்பு இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தின் உயர் ஆணையர் கோபால் பகலே சென்னையில் என்னை சந்தித்து உரையாடியபோது பல்வேறு கருத்துக்களை அவரிடம் தெரிவித்தேன். 

The programs received by the resident Tamils should be available to the Tamils living in the camp .. PTR
Author
Chennai, First Published Nov 24, 2021, 11:44 AM IST

இலங்கைத்தமிழர் மறுவாழ்விற்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து உடனுக்குடன் அதற்கு செயல்வடிவம் கொடுத்து வருகிறார் முதல்வர் மு.க ஸ்டாலின் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். மதுரை வடக்கு வட்டம் ஆனையூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன்  மாண்புமிகு வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி,மாவட்ட ஆட்சியர்,  மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் இணைந்து  புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.பின்னர் உரையாற்றிய அவர், இந்த நிகழ்ச்சி நடைபெறுவது குறித்து எனக்கு நேற்று இரவு தெரிய வந்தது. இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 

The programs received by the resident Tamils should be available to the Tamils living in the camp .. PTR

நிதியமைச்சர் என்ற முறையில் 10 லட்சத்திற்கு அதிகமாக  நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்த நிதி ஒதுக்கீட்டிற்கான கோப்புகள்  எனது கையெழுத்திற்காக வரும். அப்போது இலங்கை தமிழர் மறுவாழ்விற்காக பல்வேறு நலத்திட்டங்கள் வழங்குவதற்கான கோப்புகள் வந்தது. அதனை பார்க்கும் போது முதல்வர் மு.க ஸ்டாலின் எத்தகைய அக்கறையோடு இலங்கை தமிழர் நலனில் செயல்படுகிறார் என தெரிகிறது. சட்டமன்றத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்விற்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்ட போது அவை நமது ஆட்சியின் எண்ணம் மற்றும் கொள்கை என்ற அளவில் புரிந்து கொண்டாலும் அவை உடனுக்குடன் செயல்பாட்டிற்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. கடைசி 30 நாட்களில் 25 க்கும் மேற்பட்ட கோப்புகளில் இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு மையங்களுக்கு வீடு ,உணவு ,இலவச எரிவாயு இணைப்பு ,கல்வி ,வேலை வாய்ப்பு உள்ளிட்டவைகளை மட்டுமல்லாது இங்கே குடியுரிமை பெற்றுள்ள தமிழர்கள் என்னென்ன திட்டங்கள் எல்லாம் பெறுகிறார்களோ அவை அனைத்தும் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் தமிழர்களுக்கும் கிடைக்க வேண்டும் என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து முதல்வர் முக ஸ்டாலின் செய்து வருகிறார்.

The programs received by the resident Tamils should be available to the Tamils living in the camp .. PTR

மேலும் சில நாட்களுக்கும் முன்பு இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தின் உயர் ஆணையர் கோபால் பகலே சென்னையில் என்னை சந்தித்து உரையாடியபோது பல்வேறு கருத்துக்களை அவரிடம் தெரிவித்தேன். அதில் முக்கியமாக இங்குள்ள இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கின்ற தமிழர்களுக்கு எத்தகைய நல திட்டங்கள் அளிக்கப்படுகிறதோ அதே போன்று இலங்கையில் உள்ள தமிழர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் அவர்களின் நலன் காக்கப்பட அந்தந்த மாநில அரசுகளை அதன் நிர்வாகிகளை ஒருங்கிணைத்து அத்தகைய திட்டங்கள் நிறைவேற்றி தர தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு தயாராக இருக்கிறது .இது குறித்து பயிற்சிக்கு அங்கிருந்து வருகை தந்தால் அவர்களுடைய பணிகளை சிறப்பித்து தருவோம். எங்களின் உறவுகள் எங்கிருந்தாலும் அவர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் .இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் இதுவரை செய்யப்படாத திட்டங்களும் இனி ஒவ்வொன்றாக நிறைவேற்றி தர முதல்வர் உறுதியாக இருக்கிறார் என இந்த தருணத்தில் தெரிவித்து கொள்கிறேன் என பேசினார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios