The privileges offered to Sasikala are true
பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள, அ.தி.மு.க. அம்மா அணி பொது செயலாளர் சசிகலாவுக்கு, சிறப்பு சமையல் அறை வசதி செய்து கொடுக்கப்பட்டது உண்மையே என்று சிறைத்துறை அதிகாரி ஏடிஜிபி மெஹ்ரித், டிஐஜி ரேவண்ணா கூறியுள்ளனர். கர்நாடக சட்டப்பேரவை பொது தணிக்கைக்குழு முன்பு அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, அவர் விரும்பும் உணவுகளை சமைத்து உண்ணவும், அதற்காக சில கைதிகளும் நியமிக்கப்பட்டதாக டிஐஜி ரூபாய் உயர் அதிகாரிக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தார். இது தொடர்பாக டிஜிபி சத்யநாராயணா 2 கோடி
ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் ரூபா கூறியிருந்தார்.
ரூபாவின் இந்த குற்றச்சாட்டால் நாடு முழுவதுமே அதிர்ச்சி அலை எழுந்தது. இது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, தனிக்குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.
ரூபாவின் அறிக்கையால் எழுந்த சர்ச்சையை அடுத்து அவர் பெங்களூரு சிட்டி போக்குவரத்து ஆணையராக மாற்றப்பட்டார். மேலும் இவரின் புகாருக்கு ஆளான சத்தியநாராயண ராவும் மாற்றப்பட்டார். தொடர்ந்து சிறைத்துறை அதிகாரிகள் சிலரும் மாற்றப்பட்டனர்.
ரூபாவின் குற்றச்சாட்டு குறித்து தனிக்குழு விசாரித்து வருகிறது. இந்த நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரியாக மாற்றப்பட்டுள்ள ஏடிஜிபி மெஹ்ரத், டிஐஜி ரேவண்ணா, சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டது உண்மைதான் என்று அம்மாநில
சட்டப்பேரவை பொது தணிக்கைக்குழு முன்பாக ஒப்புதல் அளித்துள்ளனர்.
சிறைத்துறை அதிகாரிகள் ஏடிஜிபி மெஹ்ரித், டிஐஜி ரேவண்ணா ஆகியோர், சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு தனி சமையல் அறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டது உண்மைதான் என்று கூறியுள்ளனர். மேலும், சிறையில் உள்ள பார்வையாளர்கள் அறையில்
அமைக்கப்பட்டிருந்த 2 சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
தனிக்குழு விசாரணை நடத்தி வரும் வேளையில், சிறைத்துறை அதிகாரிகள் ஏடிஜிபி மெஹ்ரித், டிஐஜி ரேவண்ணா சட்டப்பேரவை தணிக்கைக்குழுவில் ஒப்புதல் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
