தென் சென்னையில் போட்டியிடும் பவர் ஸ்டார் - தீபா... அதிமுக- திமுகவுக்கு நேர்ந்த திடீர் சோதனை..!!
தென் சென்னை மக்களவை தொகுதியில் அதிமுக- திமுக இடைடையே நேரடி போட்டின் நிலவி வரும் வேளையில் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனும், தீபாபேரவை தீபாவும் இதே தொகுதியில் களமிறங்க உள்ளனர்.
தென் சென்னை மக்களவை தொகுதியில் அதிமுக- திமுக இடைடையே நேரடி போட்டின் நிலவி வரும் வேளையில் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனும், தீபாபேரவை தீபாவும் இதே தொகுதியில் களமிறங்க உள்ளனர்.
நகைச்சுவை நடிகரான பவர்ஸ்டார் சீனிவாசன், வரும் மக்களவை தேர்தலில் தென் சென்னை தொகுதியில் அவர் வேட்பாளராக களமிறங்க உள்ளார். மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவின் இந்திய குடியரசு கட்சியின் சார்பில் சீனிவாசன் போட்டியிடுகிறார். அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ள சீனிவாசன் பேசுகையில், ‘நான் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது உறுதி. வெற்றியடைந்து மக்கள் பணி செய்ய காத்திருக்கிறேன்' என மிகுந்த நம்பிக்கையுடன் பேசினார்.
தென் சென்னை தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகளும் எழுத்தாளருமான தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிட உள்ளார். அதிமுக சார்பில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் களமிறங்க உள்ளார். தேர்தல் களத்தில் அவர்கள் இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தனது கட்சி சார்பில் போட்டியிட விடுப்பமனு பெற்று வருகிறார். தீபா தென்சென்னை தொகுதியிலும், அவரது கணவரை மத்திய சென்னை தொகுதியிலும், டிரைவர் ராஜாவை வட சென்னையிலும் களமிறக்க தீபா முடிவுப் செய்துள்ளதால் அதிமுக- திமுக கட்சிகள் திகைத்து வருகிறது. (இதென்னடா அதிமுக- திமுகவுக்கு வந்த சோதனை..!)