எடப்பாடி பதறட்டும்..! கோபாலபுரம் கதறட்டும்.! அண்ணாமலைக்கு ஆதரவாக பாஜக நிர்வாகி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு
தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பதவியை ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை கூறியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மதுரையில் ஒட்டுப்பட்டுள்ள போஸ்டர் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக-பாஜக மோதல்
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிகார போட்டி காரணமாக பல்வேறு பிரிவாக அதிமுக பிளவுபட்டது. இதனையடுத்து தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக 2019 ஆம் ஆண்டு பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்தது. இந்த தேர்தலில் அதிமுக 38 தொகுதிகளில் தோல்வியை தழுவியது. இதனையடுத்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்த கூட்டணியும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் ஆட்சி அதிகாரத்தை இழந்தது. இந்தநிலையில் தற்போது அதிமுக- பாஜக இடையே கூட்டணி மோதல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைக்கும் என பாஜக நிர்வாகிகள் கூறி வருவது அதிமுகவினர் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இந்தநிலையிலையில் தான் பாஜகவின் ஐடி பிரிவு நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் பாஜகவில் இணைந்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அதிமுக- பாஜகவினர் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
தனித்து போட்டி- அண்ணாமலை
இதன் தொடர்ச்சியாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும் போது, பாஜகவை நாம் வலுப்படுத்த வேண்டும் தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை, திராவிட கட்சிகளுடன் இணைந்து பாஜக தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதை விரும்பவில்லை. தமிழகத்தில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன் என அண்ணாமலை தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அண்ணாமலையின் கருத்திற்கு பாஜகவின் மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
எடப்பாடி பதறட்டும்
இந்தநிலையில் மதுரையில் பாஜக நிர்வாகி சார்பாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், கழகங்கள் இல்லா தமிழகம், கவலைகள் இல்லாத தமிழர்கள், உங்களோடு இரத்தம் சிந்த உண்மையான கூட்டம் உண்டு, எங்கள் அண்ணாவே எடப்பாடி பதறட்டும் ! கோபாலபுரம் கதறட்டும் என அச்சடிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் திராவிட அண்ணா இல்லை, சங்கிகளின் அண்ணா என பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் பாஜக மற்றும் அதிமுகவினர் இடையே மேலும் மோதலை அதிகரித்துள்ளது.
இதையும் படியுங்கள்