அமைச்சர் பதவியை காப்பாற்றிக் கொள்ள சிறப்பு பூஜைகள் செய்து இருக்கிறார் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. 

தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் பதவியை, சமீபத்தில், முதல்வர் பறித்து விட்டார். இதைப் பார்த்து, மேலும் சில அமைச்சர்களுக்கு, பதவி பயம்வந்துட்டது. சமீபத்தில், திருத்தனி, முருகன் கோவிலுக்கு, பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வந்து, சிறப்பு பூஜைகள் எல்லாம் செய்து இருக்கிறார். 

சுவாமிக்கு, 108 பால்குட அபிஷேகம் செய்திருக்கிறார். இதற்காக, பால் கூட்டுறவு சங்கம் மூலம், கேன்களில் பால் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. பிறகு 108 தேங்காய்களை ராஜேந்திர பாலாஜியே, தன் கையால் சிதறு தேங்காய் போட்டு, நேர்த்திக்கடன் செய்திருக்கிறார். இதே போல், மற்ற அறுபடை முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடத்த திட்டம் போட்டு இருக்கிறாராம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்று திரும்பிய பிறகு அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வருவார் என பேசப்படுகிறது.