the police are sleeping in flatform in rk nagar

ஆர் கே நகர் தேர்தல் நெருங்க நெருங்க ஒரு விதமான பதற்றம் தான் நிலவுகிறது. கட்சி வேட்பாளர்கள் ஒரு பக்கம் தீவிர பிரச்சாரம் , இன்னொரு பக்கம் அடி தடி சண்டை, மற்றொரு பக்கம் தற்போது அண்ணா சாலையில் திடீரென தோன்றிய பள்ளத்தில் பேருந்து விழுந்தது இது போன்ற பல நிகழ்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்துக் கொண்டிருக்கிறது .

இந்நிலையில் எது நடந்தாலும் உடனடியாக காவல் துறையை அணுகும் நம்மவர்கள், காவலர்களுக்கு எந்த வசதியை செய்து கொடுத்திருக்கிறார்கள் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது . 

ஆர் கே நகர் தேர்தலையொட்டி அப்பகுதியில் தற்போது குவிக்கப்பட்டுள்ள போலீசார் இரவு நேரங்களில் படும் அவதியை பாருங்கள் 

காவல் பணியில் இரவும் பகலும் கண் விழித்து , பணியில் உள்ள காவலர்கள் உறங்கும் இடம் இதுவா? என மனதில் கேள்வி எழுகிறது. காவலர்கள் தங்குவதற்கென , இந்த இரண்டு நாட்களுக்காவது, வேறு ஏதாவது மாற்று இடம் ஒதுக்கப் பட்டால்,நன்றாக இருக்கும் என மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்