விஜயகாந்த் மைத்துனர் எல்.கே.சுதீஷ் வெளியிட்டுள்ள கார்ட்டூன் அரசியல் மன்றத்தில் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.  

தேமுதிகவின் இளைஞர் அணி தலைவர் எல்.கே.சுதிஷ், தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ள கார்ட்டூன், திமுக தொண்டர்களை கொதிப்படைய வைத்திருக்கிறது. விஜயகாந்த் காலில் அரசியல் கட்சி தலைவர்கள் வீழ்ந்து கிடப்பது போல அந்த கார்ட்டூன் வரையப்பட்டிருக்கிறது. காலில் விழும் அரசியல் தலைவர் ஒருவரின் தோளில் மஞ்சள் துண்டு இருக்கிறது. அதாவது, விஜயகாந்த் காலில் கலைஞர் வீழ்ந்து கும்பிடுவது போல கார்ட்டூன் வரையப்பட்டு அதனை முகநூலில் பதிவு செய்துள்ளார் சுதிஷ். 

அந்த கார்ட்டூன் தற்போது வைரலாகி வரும் நிலையில், அந்த கார்ட்டூனைப் பார்த்த திமுக தொண்டர்கள் கொந்தளிக்கிறார்கள். அரசியல் கட்சிகளிடத்தில் சர்ச்சைகளையும் எதிரொலிக்க செய்கிறது சுதீஷின் கார்ட்டூன். அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிக இந்த முறை கூட்டணி மாறலாம் எனக் கூறபடுகிறது. பிரேமலதாவும் தேமுதிக தனித்துப்போட்டியிடும் எனக்கூறி வருகிறார். ஒவ்வொரு தேர்தலின் போதும் இப்படி தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து விட்டு கூட்டணி பேரத்தை நடத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. இந்த நிலையில் விஜயகாந்த் காலில் அரசியல் தலைவர்கள் அனைவரும் வீழ்ந்து கிடப்பதை போல வெளியிட்டுள்ள கார்ட்டூன் பரபரப்பை கிளப்பி உள்ளது. 

உடல் நலம் மிகக்குன்றி பிறர் உதவியுடன் வாழும் ஒருவரை வைத்து அரசியல் செய்து பிழைப்பதெல்லாம் மிகத்தவறு. தேமுதிகவுக்கு இந்தத் தேர்தல் பெரும் பாடம் சொல்லிக் கொடுக்கும். இந்த முறை கண்டிப்பா தெருவுலதான் விடப் போறாங்க.  சந்தேகமே வேண்டாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.