Asianet News TamilAsianet News Tamil

தமிழக மக்களே மீண்டும் உஷார்... அடுத்த 24 மணி நேரத்தில் மழை, 55 கிலே மீட்டர் வேகத்தில் சூறாவளி.

நவம்பர் 27 வடக்கு கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள்,  வட  தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகள்,  குஜராத் மற்றும் மகாராஷ்டிரா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே  55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்
 

The people of Tamil Nadu are alert again ... Rain in the next 24 hours, a hurricane with a speed of 55 km.
Author
Chennai, First Published Nov 27, 2020, 1:36 PM IST

ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் ஒட்டி நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வட தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது  

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகப்பட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு (28-11-2020) வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகப்பட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 26  டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும். 

The people of Tamil Nadu are alert again ... Rain in the next 24 hours, a hurricane with a speed of 55 km.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்: (சென்டிமீட்டரில்) சோளிங்கர் (ராணிப்பேட்டை) 23, வடபுதுப்பட்டு  (திருப்பத்தூர்) 16, பொன்னை அணைக்கட்டு (வேலூர்), வேலூர் (வேலூர்), அம்முண்டி  (வேலூர்) தலா 14,  ஆம்பூர் (திருப்பத்தூர்), ராம கிருஷ்ணராஜுபேட்டை (திருவள்ளூர்) தலா 13, அலங்காயம்  (திருப்பத்தூர்), காட்பாடி  (வேலூர்) தலா 12, வாணியம்பாடி (திருப்பத்தூர்), திருபுவனம்  (சிவகங்கை), காவேரிப்பாக்கம்  (ராணிப்பேட்டை) தலா 9, வாலாஜா  (ராணிப்பேட்டை), குடியாத்தம் (வேலூர்), விரிஞ்சிபுரம்  Aws (வேலூர்) தலா 8, தேவகோட்டை  (சிவகங்கை), வெம்பாக்கம்  (திருவண்ணாமலை), மேலாலத்துர் (வேலூர்) தலா 7, சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. 

The people of Tamil Nadu are alert again ... Rain in the next 24 hours, a hurricane with a speed of 55 km.

மீனவர்களுக்கான எச்சரிக்கை : நவம்பர் 27 வடக்கு கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள்,  வட  தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகள்,  குஜராத் மற்றும் மகாராஷ்டிரா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே  55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.நவம்பர் 28 தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய நிக்கோபார்  தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும்  இடையிடையே  65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

The people of Tamil Nadu are alert again ... Rain in the next 24 hours, a hurricane with a speed of 55 km.

நவம்பர் 29  முதல்  நவம்பர் 30 தெற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடலோரப் பகுதிகளில்  சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும்  இடையிடையே  65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். டிசம்பர் 01 தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழ்நாடு கடலோர பகுதிகள்,  தென் கடலோர ஆந்திரப் பகுதிகள், குமரிக்கடல்  மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும்  இடையிடையே  65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என  அறிவுறுத்தப்படுகிறார்கள். என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios